ஆகஸ்ட 2-ல் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

 பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தொடங்கிவைத்தார். 

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் ஜூன் 4 வரை விண்ணப்பிக்கலாம். www.tneaonline.org எனும் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்கிவைத்தப் பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், ‘பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 7 அன்று தொடங்கும்.

மொத்தம் 4 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடக்கும், 3.10.2023 வரை கலந்தாய்வு நடைபெறும். 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 2023-24 ம் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு மே 8-ம் தேதி தொடங்கும். மே 19 வரை விண்ணப்பிக்கலாம். மொத்த 1,07,395 இடங்கள் உள்ளன.

2,98,400 பேர் கடந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். இனி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தனித்தனியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. 5 கல்லூரிகள் வரை விண்ணப்பிக்கும் போது 50 ரூபாய் மொத்தமாக செலுத்தினால் போதும். 

5 கல்லூரிகளுக்கு மேல் விண்ணப்பிக்கும் போது கூடுதல் 50 தனித் தனியாக செலுத்தவேண்டும். www.tngasa.in என்கிற இணையதள முகவரியில் கலை அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிக மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடந்துள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை 53% சதவிகிதமாக உள்ளது. 

இந்திய அளவில் முதல் 100 இடங்களில் 18 கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை. 

சென்னை பல்கலைக்கழகம் உலக அளவில் 547 வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் சென்னை பல்கலைக்கழகம் 12 வது இடத்தில் உள்ளது. 

0 Comments:

Post a Comment