பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10 வரை அவகாசம்

 

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200-க்கும்மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 14 ஆயிரம் இடங்களும் உள்ளன. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


இந்த இடங்களுக்கு 2023 -24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். ஜூன் 28-ம் தேதி (இன்று) மாலை 5 மணியுடன் விண்ணப்பிப்பது நிறைவடைய இருந்தது.


இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்றுவிண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ)நீட்டித்துள்ளது. தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளங்களை பார்த்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ்முதல் சுற்று கலந்தாய்வு முடிந்த பின்னர், மருத்துவம் சார்ந்த துணை பட்டப்படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

0 Comments:

Post a Comment