Showing posts with label CBSE. Show all posts
Showing posts with label CBSE. Show all posts

CBSE - மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை: 9 முதல் 12-ம் வகுப்புக்கு கொண்டுவர திட்டம்

 


1204338

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடுமுழுவதும் 29,009 பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு அம்சங்களில் மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து சிபிஎஸ்இ மண்டல அலுவலர்கள் சிலர் கூறும்போது, ‘‘சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம்,கணிதம், அறிவியல் பாடங்களுக்கும், 11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம், உயிரியல்பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையைஅமல்படுத்த திட்டமிட்டுள்ளது.


சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இந்ததேர்வுகளை நவம்பர், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை முறைக்குப்பின் பெறப்படும் கருத்துகள், பகுப்பாய்வுகள் ஆகியவற்றைக் கொண்டுஇத்திட்டம் அமல்படுத்தப்படும்.


கரோனா காலத்தில் புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்த டெல்லி பல்கலைக்கழகத்திடமும் வாரியம் ஆலோசனை கேட்க உள்ளது’’ என்றனர்.

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

CBSE - 10-ம் வகுப்பு தேர்வு; கணிதம், இயற்பியல், வேதியியலில் முக்கிய தலைப்புகள் இங்கே

 uurs7NIXnmDE263HEI2d

 வாரியத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ (CBSE) அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தலைப்புகளின் முழுமையான பட்டியல் இங்கே.


பாடம் வாரியாக முக்கியமான தலைப்புகள்


கணிதம்


கணிதம் என்பது துல்லியமான மற்றும் பயிற்சியின் விளையாட்டாகும், அங்கு சில அத்தியாயங்கள் மதிப்பெண்களின் புதையலுக்கு திறவுகோலாக இருக்கும். இயல் எண்கள், பல்லுறுப்புக்கோவைகள் மற்றும் இருபடி சமன்பாடுகள் போன்ற அத்தியாயங்கள் முக்கியமானவை, ஏனெனில் அவை உயர் கணிதக் கருத்துகளின் முதுகெலும்பாக அமைகின்றன. இதேபோல், முக்கோணங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு வடிவவியலைப் புரிந்துகொள்வது அவற்றின் வெயிட்டேஜ் மற்றும் சிக்கலான கணக்குகளில் அவற்றின் பயன்பாடு காரணமாக கணிசமான வித்தியாசத்தை ஏற்படுத்தும். எண்கணித முன்னேற்றம் மற்றும் முக்கோணவியல் ஆகியவற்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது ஒரு நல்ல மதிப்பெண்ணுக்கும் சிறந்த மதிப்பெண்ணுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். மாணவர்கள் மேற்பரப்பு பகுதிகள் மற்றும் தொகுதிகளின் முக்கியத்துவத்தை கவனிக்க மறக்கக்கூடாது, அதே போல் புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு, இவை பெரும்பாலும் எளிதாக மதிப்பெண் பெறும் பகுதிகளாகக் காணப்படுகின்றன.


வேதியியல்


வேதியியல் பெரும்பாலும் 'மத்திய அறிவியல்' என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இயற்பியலை உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பிற இயற்கை அறிவியல்களுடன் இணைக்கிறது. சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், வேதிவினைகள் மற்றும் சமன்பாடுகள் மற்றும் அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் ஆகியவை பெரும்பாலும் அதிக மதிப்பெண்களைக் கொண்ட அத்தியாயங்களாகும். உலோகங்கள் மற்றும் உலோகங்கள் அல்லாதவை, கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், ஆகியவை நன்கு புரிந்து கொண்டு மதிப்பெண் பெறும் கருத்தியல் கேள்விகளால் நிரம்பியுள்ளன. தனிமங்களின் தனிம வரிசை அட்டவணை வாரியத் தேர்வுகளுக்கு ஒரு முக்கியமான அத்தியாயமாக நிற்கிறது, மேலும் எதிர்கால வேதியியல் படிப்புகளுக்கான களத்தையும் அமைக்கிறது.


இயற்பியல்


10 ஆம் வகுப்பில், இயற்பியல் என்பது பிரபஞ்சத்தின் தன்மையை நடைமுறை அணுகுமுறையுடன் புரிந்துகொள்வதாகும். ஒளி - பிரதிபலிப்பு மற்றும் ஒளிவிலகல், மற்றும் மனிதக் கண் மற்றும் வண்ணமயமான உலகம் ஆகியவை வரைபடங்கள் மற்றும் எண்ணியல் கேள்விகளால் நிரம்பிய அத்தியாயங்கள், அவை நன்கு பயிற்சி செய்தால், ஒருவரின் மதிப்பெண்களை கணிசமாக அதிகரிக்க முடியும். மின்சாரம் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் அதிக மதிப்பெண்களை அளிப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் அனுபவிக்கும் நிகழ்வுகளை விளக்குவதால் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இவற்றில் தேர்ச்சி பெற்றால், மதிப்பீட்டின் போது ஒரு மாணவர் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.


வாரியத் தேர்வு அழுத்தத்தை கையாள குறிப்புகள்


பாடப் புத்தகங்களின் வியூகம்


இந்த அத்தியாயங்களைப் பயன்படுத்திக் கொள்ள, மாணவர்கள் தங்கள் தயாரிப்பில் புத்தக உதவிகளை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்வு முறை மற்றும் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகளின் வகையைப் புரிந்துகொள்ள மாதிரித் தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை விடாமுயற்சியுடன் பயிற்சி செய்ய வேண்டும். நேர நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், தேர்வுச் சூழலின் அழுத்தத்திற்குப் பழகுவதற்கும் மாதிரித் தேர்வுகள் முக்கியமானவை.


வழிகாட்டிகள் மற்றும் குறிப்புகள் நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். வழிகாட்டிகள் பரந்த பாடத்திட்டத்தின் மூலம் ஒரு தீர்க்கமான பாதையை வழங்கும் அதே வேளையில், தனிப்பட்ட குறிப்புகள் விரைவான குறிப்புகளாக செயல்படலாம் மற்றும் கடைசி நிமிட திருப்புதல்களுக்கு உதவலாம். வீடியோ டுடோரியல்கள், குறிப்பாக இயற்பியல் மற்றும் வேதியியலில் உள்ள சிக்கலான கருத்துக்களுக்கு, வித்தியாசமான கண்ணோட்டத்தை வழங்குவதோடு சிறந்த புரிதலுக்கு உதவும்.


நிலைத்தன்மை மற்றும் புரிதலின் பங்கு


படிப்புப் பழக்கவழக்கங்களில் நிலைத்தன்மையும் கருத்துகளைப் பற்றிய ஆழமான புரிதலும் இன்றியமையாதது. மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை விரைவில் தெளிவுபடுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும் மற்றும் அவர்களின் புரிதலை உறுதிப்படுத்திக் கொள்ள சக விவாதங்களில் ஈடுபட வேண்டும். வழக்கமான திருப்புதல்கள் மற்றும் பல்வேறு கணக்குகளைப் பயிற்சி செய்வது கருத்துகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கும் அவசியம்.


அழுத்தத்தை சமாளித்தல்


தேர்வு நெருக்கடி அடிக்கடி மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது எதிர்விளைவாகும். மாணவர்கள் தங்கள் மனதை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க போதுமான இடைவெளிகள் மற்றும் ஓய்வு நேர செயல்பாடுகளுடன், சீரான வழக்கத்தை வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவையும் ஒரு மாணவரின் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும்.


மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு  வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும்போது, ​​இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மதிப்பெண்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவது இறுதி முடிவில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இது மூலோபாய திட்டமிடல், நிலையான நடைமுறை மற்றும் பாடப் புத்தகங்களின் திறம்பட பயன்பாடு ஆகியவற்றின் கலவையாகும், இது திறனை சிறந்ததாக மாற்றும்.


Click here for latest Kalvi News 

CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released

 


.com/

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு.

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


Click Here to Download CBSE Secondary School (10th) Examination Date Sheet 2024...


Click Here to Download CBSE Senior Secondary School Certificate (12th) Examination Date Sheet 2024...

🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்படாது என CBSE அறிவிப்பு

 

.com/

பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொது தேர்வில் மாணவர்களுக்கு தரவரிசை மற்றும் சிறப்பிடம் போன்றவை வழங்கப்படாது' என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.


பல்வேறு மாநில பாடத்திட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான மதிப்பெண்ணில் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு முதலிடம் இரண்டாம் இடம் முதல் கிரேடு 2ம் கிரேடு என சிறப்பிடங்கள் வழங்கப்படுகின்றன.


இந்த சிறப்பிடங்களால் மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமற்ற போட்டியும் மன அழுத்தமும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்னையை தீர்க்க தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பிடங்கள் மற்றும் தரவரிசைகளை நிறுத்தி 2017ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.


இதேபோன்று மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.யும் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்ட அறிவிப்பு :


சி.பி.எஸ்.இ. நடத்தும் பொது தேர்வுகளில் மாணவர்களின் சராசரி மதிப்பெண்கள் அவர்களின் மதிப்பெண்ணை கணக்கிடும் முறை போன்றவற்றை தெரிவிக்குமாறு பல்வேறு அமைப்புகள் தரப்பில் கேட்கப்பட்டுள்ளன.


சி.பி.எஸ்.இ.யை பொறுத்தவரை மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மண்டல அளவிலோ ஒட்டு மொத்தமாகவோ கணக்கிட்டு சிறப்பிடங்கள் வழங்கப்படுவதில்லை.


உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியுள்ள நிலையில் அந்த மாணவர் ஏதாவது ஐந்து பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு கொள்ளலாம்.


சி.பி.எஸ்.இ. வாரியம் சார்பில் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கிட்டு சராசரி மதிப்பெண் குறிப்பிடுவது கிடையாது. உயர்கல்வி சேர்க்கையோ அல்லது வேலைவாய்ப்பு வழங்கலோ எதுவானாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here t o join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சிபிஎஸ்இ 10,11,12ம் வகுப்புக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு... விரைவில் மாதிரி வினாத்தாள்...!!

 டப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுதேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் 2024ம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ வாரிய 10ம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தொடர்ந்து நடைபெறும். அதே போல் சிபிஎஸ்இ 12வது வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 10 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் பாதி நாட்கள் முடிந்து விட்ட நிலையில் 2024க்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லை. சிபிஎஸ்இ வாரிய மாணவர்கள் விரைவில் போர்டு தேர்வு தேதித்தாள் பற்றிய விரிவான தகவல்களைப் பெற வாய்ப்பு உள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "10, 11 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 55 நாட்களுக்கு முன்னதாக தேதி விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறது. மேலும் சிபிஎஸ்இ வாரியத்தின் கோட்பாடு தேர்வுகள் பிப்ரவரி 15 ம் தேதி தொடங்கும், நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 1 அல்லது 2 ம் தேதி தொடங்கும். சிபிஎஸ்இ வாரியத்தின் நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல் தொடங்கினால், அதன்படி சிபிஎஸ்இ வாரியத் தேர்வு தேதித்தாள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.


ஏனெனில் ஜனவரி 1, 2024 க்கு இன்னும் 51 நாட்கள் மட்டுமே உள்ளன. கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு டிசம்பர் 29ம் தேதி வெளியானது. இந்நிலையில் அதே போல் நடப்பாண்டிலும் தேதித்தாள் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், இந்த ஊகங்கள் குறித்து வாரியம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.இந்த முறை சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு தாளில் 50 கேள்விகளும், சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தாளில் 40 கேள்விகளும் மாணவர்களின் திறன் அடிப்படையில் கேட்கப்படலாம். இந்த திறன் அடிப்படையிலான கேள்விகள் புறநிலை வகை, குறுகிய பதில்களுடன் நீண்ட வகை. 

அத்தகைய சூழ்நிலையில், மாணவர்கள் இதுபோன்ற கேள்விகளைத் தீர்க்கவும் பயிற்சி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.கூடுதல் விவரங்களைஅறிய: https://www.cbse.gov.in/cbsenew/documents/Circular_Bifurcation_Marks_30102023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

ஜனவரி 21-ல் CTET தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

 


1149043

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


அதன்படி, நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு ஜனவரி 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் ctet.nic.in/ என்ற இணையதளம் மூலமாக நவம்பர் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News 

CBSE - பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு வெளியீடு.

 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மற்றும் கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடத்தப்பட்டது.

அதன்படி பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் 1,20,742 பேர் துணைத் தேர்வு எழுதினர். இதில் 57,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 75 மதிப்பெண்ணுக்கு மேல்402 பேரும், 60 முதல் 75 மதிப்பெண்ணுக்குள் 3,101 பேரும் பெற்றுள்ளனர். அதேபோல், பொதுத்தேர்வில் பெற்றதை கூடுதல் மதிப்பெண் பெற விரும்பி முன்னேற்றத் தேர்வை 60,419 மாணவர்கள் எழுதினர். அதில் 59 சதவீதம் பேர் கூடுதல் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மேலும், 35 சதவீதம் பேர் ஏற்கெனவே பெற்ற மதிப்பெண்ணைவிட குறைவாகவும், 6 சதவீதம் மாணவர்கள் அதே மதிப்பெண்ணையும் பெற்றுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.



 Click here for latest Kalvi News 

CBSE: சி.பி.எஸ்.இ 9-12 வகுப்பு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 முதல் 12 வகுப்புகளுக்கான வினாத்தாள் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளிகள் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருவதோடு, அவற்றின் மதிப்பீட்டு முறைகளிலும் மாற்றத்தை செய்து வருகின்றன.

வினாத்தாள் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் போட்டித் தேர்வுத் தரங்களுடன் ஒத்துப்போகிறது, இது உயர் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், முந்தைய ஆண்டு 40% உடன் ஒப்பிடும்போது, ​​50% திறன் அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும். மீதமுள்ள 30% குறுகிய மற்றும் நீண்ட பதில்கள் உட்பட கட்டமைக்கப்பட்ட பதில் கேள்விகளைக் கொண்டிருக்கும், மீதமுள்ள 20% கொள்குறி வகை கேள்விகளாக (MCQs) இருக்கும்.

“தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020க்கு இணங்க, கருத்தியல் அடிப்படையிலான கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் நோக்கிய மாற்றம் CBSEயின் புதிய வினாத்தாள் வடிவத்தில் தெளிவாகத் தெரிகிறது. கருத்தியல் வகை கேள்விகளை ஊக்குவிப்பதன் மூலம், வாரியமானது கற்றலை ஊக்கப்படுத்துவதையும், கருத்துகளின் ஆழமான புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை தேர்வுகளின் போது மாணவர்களுக்கு பயனளிப்பதோடு, மதிப்பீட்டு செயல்முறையையும் விரைவுபடுத்தும். இருப்பினும், கருத்தியல் வகை வினாக்களுக்கான இந்த மாற்றத்திற்கு ஆசிரியர்கள் மாணவர்களை வித்தியாசமாக தயார்படுத்த வேண்டும்,” என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.


 Click here for latest Kalvi News 

CBSE பள்ளிகளில் தமிழ் மீடியம்; வாரியம் உத்தரவு.

 

'நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இனி தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பாடப் புத்தகங்களை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுதும், 28,886 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 2.54 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்; 12.56 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.


இவை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

பயிற்று மொழி


இந்த பள்ளிகளில் ஆங்கிலம், ஹிந்தி ஆகியவை பயிற்று மொழியாக உள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையில், தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களிடையே பன்மொழி திறனை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பாடம் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.


இது குறித்து, சி.பி.எஸ்.இ., இயக்குனர் ஜோசப் இமானுவேல், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


தாய்மொழி மற்றும் பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து, புதிய தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் ஏற்கனவே உயர் கல்வித் துறையில் தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வி துறையிலும் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.


இதன்படி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மழலையர் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ் உள்ளிட்ட, 22 பிராந்திய மொழிகளிலும் பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும்.


மாணவர்களுக்கு பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது. பிராந்திய மொழிகளில் பாடம் கற்பிப்பதிலும், இதை நடைமுறைப்படுத்துவதிலும் சில சவால்கள் உள்ளன.


அடித்தளம்


இந்த மொழிகளில் பாடம் நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்கள் கிடைப்பது, பாடப்புத்தகங்களை தயாரிப்பது, இரண்டு, 'ஷிப்டு' களாக இயங்கும் அரசு பள்ளிகளில், இதற்கான நேரத்தை ஒதுக்குவது ஆகியவை சவாலான விஷயங்கள். இதற்கு விரைவில் தீர்வு காணப்படும்.


இதற்காக தமிழ் உள்ளிட்ட, 22 மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும்படி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு, மத்திய கல்வி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 2024 - 25ம் கல்வியாண்டு முதல், இந்த பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும்.


இந்த பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்களை தயாரிக்கும் பணியை உயர் கல்வித் துறை துவங்கியுள்ளது. நாடு முழுதும் பிராந்திய மொழிகளில் முக்கியமான போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


தொழிற்கல்வி, சட்டம், மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு, ஏற்கனவே பிராந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன.


எனவே, மாணவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கான முக்கியமான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளி கல்வி துறையிலும் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கும் முயற்சி துவங்கப்படுகிறது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எப்போது? சிபிஎஸ்இ அறிவிப்பு

 


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.


அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 55 நாள்கள் பொதுத் தேர்வு நடைபெறும் எனறு தெரிவித்துள்ளது.


சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெளியிட்ட அறிவிப்பில், 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும். தேர்வு அட்டவணை, பல்வேறு மாநிலங்களிடமிருந்து வரும் பரிசீலனைகளை ஏற்ற மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடத் தேர்வுக்கான தேதிகள் இறுதி செய்யப்படும்.


அதன்படி, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கான தேர்வுகளும், பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புக்கான தேர்வுகளும் நடைபெறவிருக்கின்றன. தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.


இதற்கு ஏற்ற வகையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறும். முக்கிய பாடத்திட்டங்களுக்கு செய்முறைத் தேர்வுகள் மிகவும் முக்கியத்துவம் பெறும் என்பதால், மாணவ, மாணவிகள் அதற்கேற்ற வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாடங்களுக்கான நேரங்களை உரிய முறையில் ஒதுக்கி, அன்றைய பாடங்களை அன்றைய நாளிலேயே படித்து தேர்வுக்குத் தயாராகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

சி.பி.எஸ்.இ., ஆசிரியர்களுக்கு பயிற்சி

 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளி ஆசிரியர்களும், குறைந்தபட்சம், 50 மணி நேர தொடர் தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என, புதிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளது.


சி.பி.எஸ்.இ., விதிகளின்படி, ஒவ்வொரு ஆசிரியரும், குறைந்தபட்சம், 25 மணி நேர பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.


இதற்காக, சி.பி.எஸ்.இ., சார்பில், நாடு முழுதும், 16 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தம், 23 பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.


இந்த வகையில், ஒவ்வொரு மாநில கல்வித்துறையுடனும், சி.பி.எஸ்.இ., இணைந்து பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு விரைவில் துவங்கும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 Click here for latest Kalvi News 

10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு? - எச்சரிக்கும் CBSE

 


மாணவர்கள்  பொய் அறிவிப்புகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால்.  உரிய சட்ட / குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது


10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.


இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  நடைபெற்று வரும் 2023ம்  கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாகவும், வினாத்தாள் வைத்திருப்பதாவும் சில சமூக விஷமிகள் யுடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் போலியான அறிவிப்புகள் பரப்பி வருகின்றன. பணம் பறிக்க முயற்சிக்க இவர்களும் மாணவர்கள்/பெற்றோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


Click here for latest Kalvi News 

CBSE Exam 2023: அடுத்த ஆண்டு முதல் CBSE பாடத்திட்டத்தில் மாற உள்ள சில முக்கிய தகவல்கள்

 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2022-23 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாடத்திட்டத்தை வாரியம் 50-50 சதவீதம் பிரித்து (CBSE Syllabus) இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், 2023 இல் முந்தைய ஆண்டுகளைப் போலவே ஒரு தேர்வு நடத்தப்படும்.

2022 ஆம் ஆண்டில், CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை இரண்டு பருவங்களாக நடத்தியது. முடிவைத் தயாரிக்க, தியரி பேப்பர்களில் டேர்ம் 1-க்கு 30 சதவீத வெயிட்டேஜும், டெர்ம் 2-க்கு 70 சதவீத வெயிட்டேஜும் வாரியம் வழங்கியிருந்தது. மறுபுறம், நடைமுறையில், இரண்டு விதிமுறைகளுக்கும் சமமான வெயிட்டேஜ் வழங்கப்பட்டது.


இருப்பினும், இந்த ஏற்பாடு அடுத்த ஆண்டு தொடராது, முந்தைய ஆண்டுகளில் இருந்தது போல் 2023 இல் ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும் என்று வாரியம் அறிவித்துள்ளது.

30% பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது..

தேர்வை ஒரே கட்டமாக நடத்துவதை தவிர, CBSE 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தையும் சுமார் 30% குறைத்துள்ளது. அடுத்த ஆண்டு தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.


இந்த ஆண்டுக்கான அத்தியாயங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. கூடுதலாக, சில பாடங்களில் இருந்து பல அத்தியாயங்கள் மற்றும் அலகுகள் அகற்றப்பட்டுள்ளன, மற்றவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.


2023 ஆம் ஆண்டு வாரியத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான படிப்புப் பொருள், மதிப்பெண் திட்டம், மாதிரி வினாத்தாள், கேள்வி வங்கி போன்றவற்றை வாரியம் விரைவில் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். மாதிரித் தாளில் இருந்து, மாணவர்கள் தேர்வைப் பற்றிய ஒரு யோசனையைப் பெறுவார்கள், மேலும் அது தயாரிப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மாதிரி தாள், குறிக்கும் திட்டம்...

மாதிரி வினாத்தாள், மதிப்பெண் திட்டம், கேள்வி வங்கி போன்றவை, சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் அங்கு அனைத்து விவரங்களையும் சரிபார்க்க முடியும்.


இந்த ஆண்டு வாரியத் தேர்வுகள் தாமதமானது, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பாடத்திட்டத்தை எழுதுவதற்கும், 12 ஆம் வகுப்பிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் குறைந்த நேரமே உள்ளது. இது தீவிர திட்டமிடல் மற்றும் கூடுதல் வகுப்புகள் தேவைப்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.71% மாணவர்கள் தேர்ச்சி

சிபிஎஸ்இ பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறியலாம். 

பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.அவர்களும் மேற்கூறிய இணையதளங்களிலேயே தேர்வு முடிவை அறியலாம். 
இந்நிலையில் பிளஸ்-2 மத்திய பாடப்பிரிவுக்கான (சிபிஎஸ்இ) தேர்வு முடிவு தாமதத்தால் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. பின்னர் அது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தேர்வு வாரியம் விரைவில் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

 சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 98.83% பேர் தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் முதல் இடத்தை பெற்றுள்ளது. பெங்களூரு இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.