Showing posts with label Educational news. Show all posts
Showing posts with label Educational news. Show all posts

`ஒரு மாணவர் கூட இல்லாத 22 அரசுப் பள்ளிகள்’ - தொடக்கக் கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை. அதேபோல பல்வேறு பள்ளிகளில் ஒற்றை இலக்கங்களில் தான் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குநர் ஆசிரியர்கள் சங்கங்களில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாகப் பேசப்பட்டது. மேலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் ஆசிரியர் சங்கங்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

ஒரு மாணவர் கூட இல்லாத 22 பள்ளிகளில் பத்து மாணவர்களைச் சேர்த்தால் இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் தான் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளது. இந்த பள்ளிகளில் இரட்டை இலக்கத்தில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறைவான பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும். அதற்காக மாணவர் சேர்க்கை பேரணி நடத்தவும் தொடக்கக் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்கம் - குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உத்தரவு.


GO NO : 98 ,Date : 01.06.2022 - Tamilnadu Education policy Committee GO - Download here

சென்னை மாநகராட்சி 1 முதல் 5-ம் வகுப்பு பள்ளி குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி

சென்னை மாநகராட்சி மூலம் 281 பள்ளிகள் நடத்தப்படுகின்றன. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என நடத்தப்படும் இப்பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.




கொரோனா காலத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்தது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து பள்ளிகளும் வருகிற 13-ந்தேதி தொடங்கப்படுகின்றன.

ஆனாலும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. அட்மிஷன் உறுதி செய்யப்படுவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் அதிகளவு மாணவர்களை சேர்க்க மாநகராட்சி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் உள்ள பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுளது.

குழந்தைகள் வேலைக்கு செல்வதை தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு கலந்தாய்வு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் கிடைக்கும் சலுகைகள், கல்வி உபகரணங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஏழை குழந்தைகள் காலை உணவு அருந்தாமலேயே பள்ளிக்கு வருவதால் சோர்வு அடைவதால் அதனை போக்க காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பள்ளி திறந்தவுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவாக என்ன வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் காலைஒ 8 மணிக்கு சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்படுகிறது. 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை அருந்திவிட்டு வகுப்பிற்கு செல்லவும் முடிவு செய்யப்படுகிறது.

அம்மா உணவகங்களில் இருந்து விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதனை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்கிட ஏற்பாடு நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கல்வித்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடத்தை பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 670 பள்ளிகள் தேர்வாகின. அதில் முதல்கட்டமாக 67 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் தந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதி மற்றும் சமூகநலத் தொண்டு நிறுவனங்கள் பங்களிப்புடன் விவசாயம், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், சுற்றுலா, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த தொழிற்கல்வி பாடம் 2019-ம் ஆண்டு 184 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டன. மாநிலம் முழுவதும் 29,456 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர்.


இந்நிலையில் வரும் கல்வியாண்டு (2022-23) முதல் 9, 10-ம் வகுப்பில் தொழிற்கல்வி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது; உயர்நிலை வகுப்புகளில் உள்ள தொழிற்கல்வி பாடத்தை நிறுத்துவதற்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 2022-23-ம் கல்வியாண்டு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் இடம்பெறாது. 9-ம் வகுப்பு முடித்து, 10-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி பாடம் இருக்கும்.

அதற்கேற்ப 184 பள்ளிகளில் உள்ள தொழிற்பயிற்சி ஆய்வகங்களின் உபகரணங்களை தலைமை ஆசிரியர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வழக்கம்போல் 11, 12-ம் வகுப்புகளில் மட்டுமே மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை படிப்பார்கள் என்றனர்.

9-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் நிறுத்தப்படுவதால், 150-க்கும் அதிகமான தற்காலிக பயிற்றுநர்கள் பணியை இழக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆன்லைன் மூலம் ஆசிரியக் கல்விக்கு அங்கீகாரம்: தேசிய கவுன்சிலின் புதிய முயற்சி

உயர்க் கல்வி நிறுவனங்கள்/ ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் கல்விப் படிப்புகளை அங்கீகரிப்பது தொடர்பான ஒட்டுமொத்த செயல்முறையையும் ஒழுங்குமுறைபடுத்த ஆன்லைன் தளத்தை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (National Council for Teacher Education (NCTE)  தொடங்கியுள்ளது.



நாட்டில் ஆசிரியர் கல்வி வழிமுறையை ஒழுங்குபடுத்துவதற்காக 1993 வருட சட்டத்தின் கீழ் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் நிறுவப்பட்டது. மத்திய, மாநில உயர்க் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனங்களின் (DIETs) ஆசிரியர்ப் பாடங்களுக்கான அனுமதியை இந்த கவுன்சில் வழங்கி வந்தது.

இந்நிலையில், பாடங்களுக்கான விண்ணப்பக் கடிதம் பெறுவது  முதல் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, ஆய்வு மற்றும் தணிக்கை செய்வது தொடர்பான அத்துணை செயல்முறைகளும் இந்த புதிய தளத்தில் செயலாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தொடங்கப்பட்ட நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி ( 4 Year Integrated Teacher Education Program) படிப்புக்கான செயல்முறையும் இந்த தளத்தின் மூலம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

4 ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சி கல்வி அங்கீகாரம் பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளும் இந்த தளத்தில்  நடைபெறும். உயர்க்கல்வி நிறுவனங்கள்  https://ncte.gov.in/Website/admin_Panel.aspx). 'நிர்வாக உள்நுழைவு' மூலம் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். ஆய்வு மற்றும் தணிக்கை செய்வது தொடர்பான விபரங்களை தளத்தில் உள்ள VT portal மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

இந்த தளம் என்சிடிஇ-யின் செயல்பாட்டில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவரும். இது தன்னியக்க வலுவான கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தொழில் தொடங்குவது எளிதாக்கப்படும் என்றும் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

மாணவா்களுக்கு இலவச ஆங்கில பேச்சுப் பயிற்சி

பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் (என்சிடிசி) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆங்கிலம் படித்தாலும், ஆங்கிலம் பேச முடியாமல் திணறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்காக, காகிதமில்லா ஆங்கில பேச்சுப் பயிற்சி என்ற இலவச திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறோம்.

இத்திட்டத்தில் ஆங்கில பேச்சுப் பயிற்சியுடன், பொது அறிவு, திறன் மேம்பாடு ஆகியவையும் சோ்க்கப்பட்டுள்ளன.

தினசரி பாடங்கள் மற்றும் செயல்பாடுகள் வாட்ஸ் ஆப் மூலம் கற்பவா்களுக்கு நேரடியாகப் பகிரப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2.30 முதல் மாலை 5.30 மணி வரை நேரலை வகுப்புகளும் நடைபெறும்.

இதில் மாணவா்கள் இலக்கணம் கற்பது மட்டுமின்றி, விளையாட்டு மற்றும் புதிா்கள் மூலம் ஆங்கிலத்தில் பேச எளிதாக கற்றுக் கொள்கின்றனா்.

பங்கேற்க விரும்பும் மாணவா்கள் அல்லது அவா்களது பெற்றோா், 73561 63344 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.",

பள்ளிக்கல்வித்துறை - கூகுள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து


கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

தொழில்நுட்பம் மூலம் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்துகொள்ள 'Google Road Along' என்ற செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

 முத்தமிழ் மொழிபெயர்ப்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடம் திட்டத்தில் நூல்களையும் வெளியிட்டார்.

'பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி' - அமைச்சர் அன்பில் மகேஷ்

வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.


மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மாநில கல்வி துறை ஒரு சிறந்த மாற்றம் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

கே.வி., பள்ளி மாணவர் சேர்க்கை; புதிய வழிகாட்டுதல் வெளியீடு

நாடு முழுதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள, 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது.

இதில், 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு ஆண்டுதோறும் தலா 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன. நேரடி வாரிசுகள்இதன் அடிப்படையில் லோக்சபாவை சேர்ந்த 543 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவை சேர்ந்த 245 எம்.பி.,க்கள் பரிந்துரைக்கும் 7,880 மாணவ - மாணவியருக்கு இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும், 'சீட்' வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.மத்திய அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.,க்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக்குழந்தைகள், கே.வி., பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரக்குழந்தைகள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கே.வி., பள்ளிகளுக்கான அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:கொரோனா தொற்று பாதிப்பினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு அளிக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு கே.வி., பள்ளியிலும் 10 மாணவர் வரை சேர்த்துக் கொள்ளப்படுவர். 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு ஜூன் மாதம் வரை வழங்கப்படும்.பரம் வீர் சக்கரா, மகா வீர் சக்கரா, வீர் சக்கரா, அசோக் சக்கரா, கீர்த்தி சக்கரா, ஷவுரிய சக்கரா உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருது பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.ஒதுக்கீடு தொடரும்'ரா' எனப்படும் உளவு அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் 15 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.

அதே போல, பணியின் போது இறந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள், மற்றும் நுண் கலைகளில் சிறப்பு திறமை உள்ள பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு தொடரும்.வெளிநாடுகளில் இருந்து பணியிட மாறுதல் பெற்று வருபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 60 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail

Fellowship கல்வி திட்டம் - பள்ளிக் கல்வித் துறை அழைப்பு. இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - 45 ஆயிரம் & 32 ஆயிரம் ஊதியம் - Notification pdf avail



தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் திட்டம்*

*இளைஞர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

*சென்னை, ஏப். 23: அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது.

*இத்திட்டத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்ததிட்டத்தை செயல்படுத்த உள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளை ஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த 'தமிழ்நாடு முதல்வரின்* *fellowship என்கிற சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. இத்திட்டத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு* *fellowship கல்வி திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.

கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஏற்கெனவே இல் லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல் வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் உருவாக் கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களை மாநில மற்றும் மாவட்ட அளவில் 'தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப்' திட்டத்தில் இணைந்து பணியாற்றஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* மாவட்டத்திற்கு ஒரு senior fellow என்கிற பணியி டத்திற்கு ஐந்து ஆண்டுகள் பணி அனுபவத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாகப் பேச எழுத தெரிந்திருப் பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

*மேற்கூறிய தகுதியின் அடிப்படையில் மாதம் ரூ.45ஆயிரம் ஊதியத்தில் 38 மாவட்டங்களில் தலா ஒரு பணியிடம் என்கிற அடிப்படையில் 38 பணியிடங்கள் உள்ளன.

*அதேபோன்று fellows என்று புதிதாக உருவாக்கப் பட்டுள்ள பணியிடத்தில் 114 நபர்கள் மேற்கூறிய அதே தகுதிகளுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர் கள் மாதம்தோறும் ரூ.32 ஆயிரம் ஊதியத்துடன் நியமிக் கப்படவுள்ளனர்.

*இந்தத்திட்டத்தில் சேர ஏப்ரல் 22 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் பணிக் காலம் முழுவதும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும்.

 இது தொடர்பான கூடுதல் தகவல்கள்.. & Apply Link

Cick here to download- pdf  

Click here to Apply


தமிழகத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு




தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடைபெற உள்ளது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் இருந்து நடைபெற இருக்கும் பொதுத்தேர்வுக்கான பணிகல் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் முக்கியமாக செய்முறைத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 200 மதிப்பெண்களை கொண்ட ஒரு பாடத்தின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களும் 50 லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. 

எனவே மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். மதிப்பெண்கள் குறைந்துள்ள காரணத்தினாலும், கூடுதல் நேரம் இருக்கின்ற காரணத்தினாலும், தேர்வுகளை விரைவாக முடிப்பதற்காகவும் இந்த தேர்வுகள் 3 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்த நேரம் குறைப்பினால், மாணவர்களுக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

RTE 2022_2023 Admission - Dir Circular





2022-2023 கல்வியாண்டில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி (RTE) அனைத்து சிறுபான்மையற்ற  தனியார் சுயநிதி  பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகளுக்கு 25% இட ஒதுக்கீடு- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து RTE மாநில  முதன்மை தொடர்பு அலுவலர் & மெட்ரிக் பள்ளி இயக்குனரின் செயல்முறைகள்!


RTE 2022_2023 Admission Circular.pdf - Download here

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து வழிகாட்டுதல் - நான் முதல்வன் என்ற இணையதளம் வாயிலாக நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!!


Click here to download Pdf file

6 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை!

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு கால அட்டவணை- மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவிப்பு..




சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது : தமிழ் நாடு அரசு

ஆண்டுதோறும் 100  சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது - பள்ளிக்கு ரூ.10 இலட்சம் ஊக்க நிதி வழங்கப்படும்  சட்டப் பேரைவையில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் அறிவிப்பு.


சிறந்த பள்ளித் தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 

கல்வி , விளையாட்டு , மாணவர் மேம்பாடு . பள்ளிக் கட்டமைப்பு , பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடு . இல்லம் தேடிக் கல்வி என அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் . 


ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் , கேடயமும் . பள்ளிக்கு ரூ .10 இலட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும் .



பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு.

பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2022 - அமைச்சர் அறிவிப்பு.




பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்
  • 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முழுமையடைந்துள்ளது
  • 100% மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சேர்ந்து படித்து வருகின்றனர்
  • 9, 10-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 94.20%
  • 11, 12-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 88.60% - 
  • பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க நடவடிக்கை
  • அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் Smart Classes ஏற்படுத்தப்படும் - 
  • பள்ளி நூலகங்களில் உள்ள புத்தகங்கள் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள தனி Mobile App உருவாக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை


    click here to download pdf file

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய உத்தரவு.

 9 மற்றும் 10ஆம் வகுப்பில் 80க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் பயிலும் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளரை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு  13.04.2022க்குள் பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!







பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு - PDF

பொதுத் தேர்வில் ஈடுபடும் அனைத்து நிலை பணியாளர்களுக்கான கையேடு வெளியீடு - PDF


Click here to download