Showing posts with label Educational news. Show all posts
Showing posts with label Educational news. Show all posts

நாளை ( 11.08.2023 ) அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான சமூக விழிப்புணர்வு பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ' போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக , பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் 11.08.2023 அன்று அனைத்துவகை பள்ளிகளிலும் , உயர் மற்றும் மேல்நிலை வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் . இத்துடன் இணைக்கப்பட்டுள்ள போதைப்பழக்கத்திற்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழி ஏற்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கப்பட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும் , நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் விவரங்களை , இணைப்பில் கண்டுள்ள படிவம் -1 இல் அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் பெற்று மாவட்ட அளவிலான விவரங்களை படிவம் -2 இல் பூர்த்தி செய்து இவ்வியக்ககம் அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மேலும் , நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் படிவம் - 2 - ஐ dad.ebcid@gmail.com மற்றும் இவ்வலுவலக மின்னஞ்சல் msectndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் 11.08.2023 பிற்பகல் 4.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 https://enforcementbureautn.org/pledge என்ற இணைய இணைப்பினை பயன்படுத்தி மின்னணு உறுதிமொழி ஏற்க வசதி செய்யப்பட்டுள்ளது.


 இதனை பயன்படுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பதுடன் உறுதிமொழி ஏற்றமைக்கான மின்னணு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரிவித்து மின்னணு உறுதிமொழி ஏற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 Click here for latest Kalvi News 

சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று இனிப்புப் பொங்கல் வழங்க சமூக நல ஆணையர் உத்தரவு

 சமூக நல ஆணையரகம் - சத்துணவுத் திட்டம் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் தொடர்பாக சமூக நல ஆணையரின் கடிதம்.

 



 Click here for latest Kalvi News 

How to use language lab in our hitech lab ?

 

மொழிகள் ஆய்வகத்தை நம்முடைய உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வத்திலும் நம் கைபேசியிலும் எவ்வாறு பயன்படுத்தி நம் ஆங்கில புலமையை வளர்த்துக் கொள்ளலாம் ? How to use language lab in our hitech lab ? 



Step 1 - View Here

Step 2 - View Here



 Click here for latest Kalvi News 

பள்ளி வகுப்புகளில் பயன் தரும் மாற்றங்கள்

 இடை நிற்றலைத் தவிர்த்தல், தேர்ச்சி சதவீதத்தைக் கூட்டுதல், கற்றலில் சிக்கல் கொண்ட மாணவர்களின் திறன்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்தல், பெற்றோருடன் கலந்து ஆலோசித்துத் தீர்வு காண முயலுதல், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


வெறுமனே ‘ஆய்வு’ செய்தல், குறை கூறுதல், குற்றம் கண்டுபிடித்தல், கடிந்து கொள்ளுதல் என்கிற பாணியில் இருந்து முற்றிலும் மாறி களத்தில் இறங்கி, பள்ளித் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்களுடன் கைகோத்து, நேரடியாகப் பயன்தருகிற பணிகளை முன்னெடுப்பதில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வகையில், மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்காக, ஜூலை 26 அன்று, பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ‘பள்ளிக் குழுக் கட்டமைப்பு’ கூட்டம் பயன் உள்ளதாய் இருந்தது.


இன்று தமிழக மாணவர்களிடம், குறிப்பாக அரசுப் பள்ளிகளில், நாம் காணும் கவலைக்குரிய அம்சம் – கற்றலில் ஆர்வம் இன்மை. சில புதிய முயற்சிகள் மூலம் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க முடியும். பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளிலும் மாணவ மாணவியர், வகுப்பறையில் குறிப்பிட்ட ஓர் இடத்திலேயே அமர்கிறார்கள். இந்த நடைமுறையை மாற்றி, ஒவ்வொரு வகுப்பு தொடங்கும் போதும், மாணவர்களை இடம் மாறி அமரச் செய்யலாம். வாரத்துக்கு ஒருமுறையேனும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தலாம். ‘புதிய இடம்’; ‘புதிய கோணம்’- மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும்.


எந்தெந்த நாட்களில் என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டும் என்று முறையாக அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வாறே வகுப்புகள் நடைபெறுகின்றன. இயந்திர கதியில் இயங்குகிற இந்த முறையில் சிறிய திருத்தம் செய்யலாம். ஒரு நாளைக்கு ஒரு வகுப்பேனும் ‘அட்டவணைக்கு உட்படாத’ வகுப்பாக அன்றன்று தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பு ஆசிரியரின் விருப்பத்துக்கு ஏற்ப அமைந்தால் ஒரு ‘நிவாரணம்’ தருவதாய் இருக்கும்.


இதேபோன்று ஒவ்வொரு பாடத்துக்கும் (`சப்ஜெக்ட்’) குறிப்பிட்ட ஆசிரியரே பாடம் நடத்துவதில் இருந்துசற்றே மாற்றி, மாதம் ஒருமுறையேனும் அதே பள்ளியின் வேற்றுத் துறை ஆசிரியர் பாடம் எடுக்கலாம். உதாரணத்துக்கு, தமிழ் ஆசிரியர் - அறிவியல்; கணித ஆசிரியர் – ஆங்கிலம் என்று மாறிப் பாடம் எடுத்தால், ஆசிரியர்களுக்குப் புத்துணர்வு; மாணவர்களுக்குப் ‘புதிய பார்வை’ கிட்டும். யோசித்துப் பாருங்களேன்….. உடற்பயிற்சி ஆசிரியர், வேதியியல் பற்றிப் பேசினால்…. ஆங்கில ஆசிரியர் கம்பராமாயணம் வகுப்பு எடுத்தால்..? மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அப்போதே தூண்டிவிடும். அல்லவா? சோதனை முயற்சிதான்; ஏன் முயற்சிக்கக் கூடாது.? ஒரு பாடம் முடிந்தவுடன் கையோடு அந்த குறிப்பிட்ட பாடத்தின் மீது மாதிரித் தேர்வு நடத்தி, அப்போதே மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார் செய்யலாம்.


இயன்றவரை மாதம் ஒரு நாளேனும் மாணவ, மாணவியரில் இருந்து ஒருவரை அழைத்து. நடத்தி முடித்த பாடத்தைப் பிறருக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுமாறு பணிக்கலாம். அவ்வப்போது மாணவரிடம் இருந்து யாரேனும் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுகிற முறை குறித்து பின்னூட்டம் தரச் சொல்லி வாய்ப்பு தரலாம். பல சமயங்களில் மாணவரின் கருத்துகளில் உள்ள நியாயத்தை, பெற்றோர் உட்பட யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்வதே இல்லை. இந்தக் குறை நீக்கப்பட வேண்டும்.


ஒரு மாணவி அல்லது மாணவனின் தனித்திறனை, அவ்வந்த வகுப்புகளில் அவ்வப்போது வெளிக் கொணர்ந்து மனதாரப் பாராட்ட வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு மாணவி நன்றாகப் பாடுகிறார் என்றால், கால இடைவெளியில், தனது வகுப்பில் அவ்வப்போது பாட வாய்ப்பு கொடுத்து வாழ்த்தினால் எப்படி இருக்கும்..? பள்ளிப் போட்டிகளில் கலந்து கொண்டு வென்றால் கிடைக்கிற பரிசுகளை விட இது மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வகுப்புக்கு வரத் தூண்டும்.


வகுப்புகளில் அவ்வப்போது மாணவர்களுக்கு உடல்ரீதியாக ஏதேனும் ‘வேலை’ தந்து கொண்டே இருக்க வேண்டும். எழுந்திருக்க, இடம் மாறி அமர்ந்து கொள்ள, வகுப்புக்குள் நடக்க, குதிக்க…ஏதேனும் ‘உடல் அசைவு’ அவசியம் ஆகும். இதே போன்று, மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாகப் புதிர்கள், வினாடி - வினா போன்ற பயிற்சிகள் வகுப்பு நேரத்தை சுவாரஸ்யம் ஆக்கும்.


இவையெல்லாம் விட மிக முக்கியமானது – யாரெல்லாம் தவறாமல் எல்லா நாளும் பள்ளிக்கு வந்து 100% வருகை புரிகிறார்களோ, அவர்களுக்கு ஒவ்வொரு மாத முடிவிலும் ஊக்கப் பரிசு வழங்க வேண்டும். கல்வியாண்டு முடிவில் பரிசு தந்து என்ன பயன்..? மாதந்தோறும் ஊக்கப் பரிசு – அதுவும், ‘வீட்டுக்கு’ பயன் தருகிற விதத்தில் கிண்ணம், மின்னணுப் பொருட்கள், ஏன்… அரிசி பருப்பாகக் கூட இருக்கலாம். வழங்கினால், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில், வறிய நிலையில் உள்ள பெற்றோருக்கும் ஆர்வம் கூடும். அதிக நிதிச் செலவு இல்லாமலே இதனை நிறைவேற்ற முடியும். நூறு சதவீத வருகையை உறுதிப்படுத்தும் மிக நல்ல திட்டமாக இது விளங்கும். இதை பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்கலாம்.


நிறைவாக, கல்வி நிலையங்கள் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும். தனித்தனியே ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று இருக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ‘ஆரோக்கியமான’ சமுதாயம் உருவாகும். வரும் ஆண்டில் முதல் வகுப்பில் தொடங்கினாலும் அடுத்த 12 ஆண்டுகளில் எல்லா பள்ளிகளுமே பொதுப் பள்ளிகளாக மாறி விடும். தமிழ்நாடு அரசு இதனைக் கொள்கை முடிவாக அறிவித்தால், பாலினப் பாகுபாடு இல்லாத பள்ளிகள் உள்ள முதல் மாநிலமாக தமிழ்நாடு மிளிரும். நாளடைவில் எல்லா மாநிலங்களிலும் ‘தமிழ்நாடு மாடல்’ பின்பற்றப்படும். அப்போது, இன்று நாம் காணும் அல்லது கேள்விப்படும் ‘பல பிரச்சினைகள்’ தானாக மறைந்து போகும். சரிதானே..?



 Click here for latest Kalvi News 

இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக்கல்வித்துறை

 

அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


 இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

Click here to join whatsapp group for daily kalvinews update 

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!


Click here to download

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 

01.01.2022 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர்  பட்டியல் தயாரித்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

ஆசிரியர்கள் ஓய்வு குறித்த தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரை

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் வயது 60 ஓய்வு நாளுக்கான மாதத்தின் கடைசி நாளில் பணியிலிருந்து விடுவிப்பது அல்லது அந்த கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை ( Upto the end of Academic session ) மறு நியமனம் அளிப்பது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் தெளிவுரை







ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமான நிரப்புதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் புதிய வழிகாட்டுதல்கள்!

 தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின்  அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் ( Guide lines ) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் 

Temporary Teacher Post School Education New Instructions - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிக்கல்வித்துறையில் செய்யப்பட உள்ள நிர்வாக மாறுதல்கள் குறித்த தகவல்

 அனைத்து மாவட்டங்களிலும்  புதிதாக  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு என தனியாக மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கப்பட உள்ளது


 புதிய வரையறையின் படி 30 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது


  ஏற்கனவே அரசாணை எண் 101 படி புதிதாக துவங்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் தற்போது புதிதாக துவங்கப்பட உள்ள அலுவலகங்களுக்கு நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர்  பணியிடங்கள் புதிதாக  அனுமதிக்கப்படவுள்ளது. (சுயநிதி பள்ளி  மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு பிரிவுகள் மட்டும் அனுமதிக்கப்படும் நேர்முக உதவியாளர் பணியிடம் அனுமதிக்க படாது)


Click here to Join WhatsApp group for Daily kalvi news

உபரி ஆசிரியர்களை மற்ற அதிரடி உத்தரவு


 

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள்: தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு

 கொரோனா நோய்த் தொற்றால் இறந்த பெற்றோர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துரை தெரிவித்துள்ளது. மேலும், தாய், தந்தையரை இழந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை அரசாணை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை ஆணையம் (ncpca) ஆகியவற்றின் வழிமுறைகளை சுட்டிக்காட்டி பள்ளிக்கல்வித்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களின் விவரங்களை கணக்கெடுக்க வேண்டும். மேலும், அந்த மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே பயின்றுவரும் அந்த தனியார் பள்ளியிலேயே பயில்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அந்த மாணவர்களின் விவரங்களை பெறும் கல்வித்துறை அந்த மாணவர்களின் பள்ளி கல்வி கட்டணத்தை அரசிடம் சமர்ப்பிக்கும். அதன்பிறகு மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இதன்மூலம் கொரோனா காலகட்டத்தில் தாய் மற்றும் தந்தையரை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தாங்கள் பயின்ற தனியார் பள்ளிகளிலேயே கல்வி பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா - வினாடி வினா போட்டி நடத்துதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 சுதந்திரத் திருநாள் அமுதடப் பெருவிழா வினாடி வினா போட்டிகள் சார்பான கடிதம் நகல் , இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


மேற்கண்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு போட்டிகள் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்ற மாணவர்களின் விவரங்களை இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


இணைப்பு : பார்வையில் கண்டுள்ள கடிதம் நகல் .


Dir Proceedings - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டுதலில் , புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக பள்ளிகளில் சேர்க்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் கணக்கெடுப்பு நடத்தாமல், 4 வாரங்களுக்கு மேல் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். EMIS இணையதளம், செயலி மூலம் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், பள்ளிக் கட்டணம் கட்டாதது, உடல்நல பிரச்சனை, குழந்தைத் திருமணம், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இடைநின்ற மாணவர்களை கண்டறிவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 5,8,10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முறையாக அடுத்தடுத்த வகுப்புகளில் சேர்ந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தனிக் கவனம் செலுத்த வேண்டும். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி மாணவர்களின் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி: பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்

 பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில் நடந்த உலக திறனாய்வு உடற்திறன் தெரிவு போட்டிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். செயலி மூலம் திறன் கண்காணிக்கப்பட்டு ,மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வழிவகை செய்யப்படும் என அவர்  கூறினார்.

Click here to Join WhatsApp group for Daily kalvi news

மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்

மண்டல ஆய்வுக் குழுவினரால் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது – ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.


Zonal meeting hm instructions - Download here... 


Click here to Join WhatsApp group for Daily kalvi news

தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு!

பள்ளிக் கல்வி பதவி உயர்வு கலந்தாய்வு அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்வு கலந்தாய்வு கல்வி தகவலியல் மேலாண்மை முறைமை EMIS ) இணைய வாயிலாக நடத்துதல் தகவல் தெரிவித்தல் சார்பு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள். 




2381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் LKG,UKG வகுப்புகளை யார் கையாள்வது? - தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20220630_142631

ஊராட்சி ஒன்றிய /நகராட்சி மற்றும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும்  LKG,UKG வகுப்புகள்- 2022-2023 கல்வியாண்டு  செயல்பாடுகள்- அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


LKG,UKG - DEE Instructions - Download here


Click here to join WhatsApp group 

மாணவர் சேர்க்கை ஆசிரியர்களின் பணிகள் என்ன? - Director Proceedings

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கடமைகள்

- அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து 5+ வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வீடுதோறும் நேரடியாக சென்று (Door to door canvas) சேர்க்கையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 



* பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5+ வயதுடைய

குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசுப் பள்ளிகளில் சேர்க்க (Spot Admission) நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி அமைந்திருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 5+ மாணவர்களை 100% அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரின் தலையாய கடமையாகும் பள்ளியின் சாதனைகள், வளர்ச்சி, பல்வேறு வகையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்விமுறை, பாதுகாப்பு குறித்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தின் வாயிலாக பெற்றோர்களிடம் எடுத்து கூறலாம். - பள்ளிகளில் உள்ள திறன் வகுப்பறைகளின் (Smart Class) செயல்பாடுகள் பற்றியும் விரைவுத் துலங்கல் குறியீடு (Quick Response Code) வழியாக பாடக் கருத்துகள் எளிமையாக்கப்பட்டு கற்றல் செயல்பாடு நடைபெறுகின்றது என்பதைப் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக் கூற வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகரான இணைய வழி (Online class) பாட கற்பித்தல் பற்றியும் புலனக்குழு (Whatsapp Group) வழி ஆசிரியர்-மாணவர் பாட பரிமாற்றங்கள் பற்றியும் பெற்றோர்களுக்கு விரிவாகவும் தெளிவாகவும் தெரிவித்தல் வேண்டும்.


* மாணவர்கள் சேர்க்கை பற்றி சமூக வலைதளங்களில் ஆடியோ / வீடியோ பதிவுகள் இடம் பெறச் செய்யலாம். பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கப் பரிசு வழங்குவதன் மூலம் மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.







கல்வித்துறையில் மாற்றம் தொடக்க, மேல்நிலையை பிரிக்க முடிவு

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் மாற்றம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

 தனியார், உதவி பெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல், உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் பெறுதல் போன்று அனைத்திற்கும் அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து வருகிறது. இதை மீண்டும் பழைய முறைக்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

நர்சரி, தொடக்க, நடுநிலை பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உயர், மேல் நிலை பள்ளிகளை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலரை நியமிக்க உள்ளது. அதே போன்று பள்ளி அங்கீகாரம் பெறுதல், புதுப்பித்தல் போன்றவற்றிற்கு அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் இணை இயக்குனருக்கே செல்கிறது. இதற்காக தமிழக அளவில் 9 மண்டலங்களை ஏற்படுத்தி மண்டலத்திற்கு ஒரு இணை இயக்குனரை நியமிக்க உள்ளனர்.

மதுரையில் இன்று (ஜூன் 18) முதல் 25 வரை கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான கருத்தரங்கு நடக்க உள்ளது.அதில் இந்த மாற்றத்தை எப்படி செயல்படுத்துவது என்பது பற்றி ஆலோசிக்க உள்ளனர்.

 ஜூலை 'முதல் தமிழகத்தில் மீண்டும் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வியை தனியாக பிரித்து நிர்வகிக்கும் அறிவிப்பை அரசு வெளியிடும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.