Showing posts with label Scholarship. Show all posts
Showing posts with label Scholarship. Show all posts

கல்கி நினைவு அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

 


பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.


2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் பெறுமானமுள்ள உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்பவழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். பிளஸ் 1,பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை தொடங்கலாம்sc

 .

கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.


இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது.


இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.


தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.


Click here for latest Kalvi News 

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைக் கான இணையதளம் https://tnadtwscholarship.tn.gov.in/ இந்தாண்டு ஜன.30ல் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


விதிமுறைகளின்படி நடப்பு கல்வியாண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஜாதி சான்று வருமானச் சான்று ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரி பார்க்கப்படும்.


இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக 'வீடியோ' வெளியிடப்பட்டு உள்ளது.


இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Click here for latest Kalvi News 

போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற மாணவா்களுக்கு உதவித் தொகை: தமிழக அரசு திட்டம்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித் தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


தாட்கோ நிறுவனத்தின் மூலமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கிராமப் பகுதிகளில் பயிலும் மாணவா்கள் அரசு நடத்தும் போட்டித் தோ்வுகளில் முதல்நிலைத் தோ்வு, முதன்மைத்தோ்வுகளில் தோ்ச்சி பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறாா்கள். பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மாணவா்களின் பொருளாதார நிலை காரணமாக, முதன்மைத் தோ்வில் வெற்றி பெற போதுமான பயிற்சி பெற வாய்ப்பில்லை.


நகா்ப்புறங்களில் தங்கி தனியாா் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற மூன்று மாதங்களுக்கு சுமாா் ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 1 ஆகிய தோ்வுகளில் முதன்மைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணமாக ஒருவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க அரசு ஆலோசித்து வருகிறது.

இதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் இதர தோ்வுகளில் முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவித் தொகை அளிக்கவும் அரசு யோசித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே மானியம் அளிக்கப்படும்.


அரசுப் பணியில் பணியாற்றி போட்டித் தோ்வுக்கு தயாராகும் நபா்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக நிா்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவாகும். இந்தத் திட்டம் குறித்த அறிவிப்புகள் சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் போது வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா். 


Click here for latest Kalvi News 

கல்லூரி பயிலும் SC/ST மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு!!!

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது.

 இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து ( கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும் ) புதிய ( fresh ) மற்றும் புதுப்பித்தல் ( renewal ) இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


Click here for latest Kalvi News 

தமிழ் மொழி திறனறித் தேர்வு உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளின் பெயர் பட்டியல்

 


தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வில் வெற்றி பெற்று ரூ.36000/- ஊக்கத் தொகை பெறும் 1500 மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!


Tamil Mozhi Illakiya Thiranari thervu Scholarship Students List 2022 - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 


ஆசிரியர் நல நிதியம் - தமிழ்நாடு தொழில் நுட்ப பயிலக பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வியாண்டிற்குப் படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பங்கள் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் .

தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 


இத்தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.12.2022 க்குள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஆணையர் , பள்ளிக்கல்வி , டி.பி.ஐ வளாகம் , கல்லூரிச் சாலை , சென்னை -06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


CoSE - VOCATIONAL EDUCATION SCHOLARSHIP - TEACHERS WELFARE FUND REG.pdf - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 


மத்திய அரசின் கல்வி உதவித்தொகை: என்எம்எம்எஸ் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டு இருக்கிறது.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.


இத்தேர்வு மூலம் கல்வி உதவித்தொகைக்கு அகில இந்திய அளவில்ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வுசெய்ய்படுகிறார்கள். இதில், தமிழகத்துக்கான மாணவர் ஒதுக்கீட்டு எண்ணிக்கை 6,695 ஆகும். இவ்வாறு தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.


ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் புதிதாகவும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பிக்கவும் பதிவுசெய்ய வேண்டும். அந்த வகையில், நடப்பாண்டு என்எம்எம்எஸ் கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நவம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.


எனவே, தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி www.scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


 Click here to join whatsapp group for daily kalvinews update 

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

 புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:


புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு முதலமைச்சர் 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு/தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் திட்டம் துவங்கப்பட்டது.


இதுவரை 2,3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகையை பெற்று பயன் அடைந்துள்ளார்கள். தற்போது இவ்வலைதளத்தில் http://www.pudhumaipenn.tn.gov.in முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இவ்வலைத்தளத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.


அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள், மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிவரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.


மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தற்போது 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம்.


மேலும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 10 மணி முதல் 5 மணி வரை -9150056809, 9150056805, 9150056801 மற்றும் 9150056810 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

மேல்படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் 11.11.2022 க்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Minority scholarship - Last Date Extended

 Minority scholarship NSP pre matric last date extended to 31 October 2022.





Pre Matric Scholarships Applying date Extension

 சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 15.10.2022 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.


Pre Matric Scholarships Scheme for Minorities


உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!

 அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ''புதுமைப் பெண் திட்டம்'' என்று பெயரிடப்பட்டுள்ளது!



 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

“மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு

 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்குப் பதிலாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு


GO NO : 46 , DATE : 02.08.2022 - Download here...



Click here to Join WhatsApp group for Daily kalvi news

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டம்; வெளியானது சூப்பர் அறிவிப்பு

 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தில் விண்ணப்பித்த மாணவிகள், தங்கள் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இரண்டு நாள் கால அவகாசம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், மாதம் ரூ.1,000/ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

இதற்கான, விண்ணப்பங்கள் கடந்த ஜுலை 10ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், தங்கள் விண்ணப்பங்களில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மாணவிகள் தமிழ்நாடு அரசிடம்  கோரிக்கை வைத்து வந்தன. இந்த கோரிக்கையினை ஏற்று, உயர்கல்வித் துறை தற்போது இரண்டு நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது.

எனவே, மாணவிகள் இந்த வசதியை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கிக்கணக்கு விவரங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் மேற்கொள்ளுதல், புதிதாக வங்கிக்கணக்கு தொடங்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைத்து மாணவிகளுக்கும் இந்த வசதி பொருந்தும்.

திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, பிற வாய்ப்புகள் ஏதும் வழங்கப்படாது என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை கவனமுடன் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்ள, https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்..

Click here to Join WhatsApp group for Daily kalvi news

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை திட்டம்.. பள்ளிப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்

Minority Scholarship Scheme: 2022- 23 கல்வியாண்டிற்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம், தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை ஆகிய மூன்று திட்டங்களுக்கு  மாநிலத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சிறுபான்மையினர் நல இயக்ககம் தெரிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்:

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி பற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த மாணவ/ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

உதவித் தொகைகள்:


இந்திய அரசு/மாநில அரசு/ அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ/மாணவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த கல்வித் தொகையைப் பெற, மாணவர்கள் தங்கள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காட்டிற்கு குறையாமல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

முதல் இரண்டு திட்டங்களிலும், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை விட குடும்ப வறுமைக்கு முக்கியத்துவம் அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.  மூன்றாவது திட்டத்தில், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

முக்கியமான நாட்கள்:

பள்ளிப் படிப்பு  கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு புதிதாக பதிய அல்லது புதுப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரை 30.09.2022 வரையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மேற்படிப்பு  மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படை கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 31.09.2022 நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

www.scholarship.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

கடந்த 2006ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச ஆதரவு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டன. மத்திய அரசின் 100%  நிதிப் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  மாணவ/ மாணவியரின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும். மேற்படி, தகவல்களுக்கு minorityaffairs.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

தமிழ்நாடு கல்வி ‘பெல்லோஷிப் ' திட்டம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

 தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக இல்லம் தேடிக் கல்வி,எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம் பள்ளி நம் பெருமை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அவ்வகையில், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக ‘தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது


அதன்படி, முதுநிலை உறுப்பினர் (senior fellow), உறுப்பினர் (fellow) என 2 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை உறுப்பினர் பதவிக்கு 38 பணியிடங்களும், உறுப்பினர் பதவிக்கு 114 பணியிடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை 15-ம் தேதியுடன் நிறைவுபெற்றது.


தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூலை31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ள பட்டதாரிகள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform என்ற வலைதளம் வழியே உடனடியாக விண்ணப்பிக்கலாம்.


மொத்த பணிக்காலம் 2 ஆண்டுகளாகும். முதுநிலை உறுப்பினருக்கு ரூ.45,000, உறுப்பினருக்கு ரூ.32,000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும். இந்தப் பணிக்காலத்தில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், முழுமையாக பணியைமுடிப்பவர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை tnschools.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வித் திட்டத்தின் கீழ் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) இளங்கோவன் வெள்ளைச்சாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏழை மாணவர்கள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பு படிக்கஉதவும் வகையில், பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டம் கடந்த 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவில்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரி குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் மற்றும் விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - முழுவிவரம் : ( Application Form Direct Link)


ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பிக்கும் இணையதள இணைப்பு.


Tamil Nadu Education Fellowship - Application Form - View here  

 ஃபெல்லோஷிப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக , நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு , கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக " இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை " என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

 

இத்திட்டங்கள் அனைத்தும் , அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு , எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி , உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன . ஆர்வமும் , திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச , எழுத , படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்

விண்ணப்பம் செய்யும் காலம் : ஏப்ரல் 22 , முதல் ஜூன் 15 , 2022 வரை 

பணிக்காலம் : ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும்.

 மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் , பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட அரசு எடுத்து வரும் இச்சிறந்த முன்முயற்சியில் இணைந்து செயலாற்ற வாருங்கள் !

 


IMG_20220516_192722

IMG_20220516_192732