Showing posts with label TRAINING. Show all posts
Showing posts with label TRAINING. Show all posts

புதிதாக நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி - SCERT Proceedings

 



மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , பல்வேறு திட்டங்களை மாணவர்களின் கல்வித் தா மேம்பாட்டிற்காக செயற்படுத்தி வருகின்றது . கற்றலில் மாணவர்களின் அடைவை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் வகுப்பறை நிகழ்வை செயல்பாடுகளுடன் விளக்கத் திட்டமிடப்பட்டுள்ளது . பாடத்திட்டம் , பாட புத்தகம் உருவாக்கம் , கற்பித்தல் அணுகு முறைகள் , வகுப்பறை மேலாண்மை , புதிய கற்பித்தல் உத்திகள் , வினாத்தாள் தயாரித்தல் மற்றும் கல்வி துறை அமைப்பு ஆகியவை சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான வளங்களைத் தயாரித்து பயிற்சி அளிக்க இணைப்பு 1 இல் கண்ட மாநில வளக் குழுவும் , இணைப்பு 2 இல் உள்ள ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது .

1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி: ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்ய உத்தரவு

 தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொன்மைகளின் சிறப்புகளை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக 1,460 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்க இருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கட்டிடக்கலை, கல்வெட்டுகள், பாசன கட்டுமானங்கள், கலைகள் மூலம் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, கலாச்சாரங்கள், தொன்மைகளை அறிய முடிகிறது. இவற்றைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் குறித்து உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரலில் தமிழக அரசு அறிவித்தது.


அதன் தொடர்ச்சியாக, தொல்லியல் ஆர்வமுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பயிற்சிக்கு தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அளிக்கப்பட உள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு அறிவித்திருப்பது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: தமிழர்களின் தொன்மைகளை பாதுகாக்கும் வகையிலும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொல்லியல் பயிற்சியளிக்க வேண்டும் என மாநில தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.


அவரது பரிந்துரையின்பேரில், 1,000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தற்போது, முதல்கட்டமாக தொல்லியல் ஆர்வமும், அனுபவமும் கொண்ட பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 1,460 ஆசிரியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.


இவர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மேலும், இந்த பயிற்சியில், பட்டதாரி ஆசிரியர்கள் என்று சுருக்காமல் ஆர்வமுள்ள அனைத்து வகை அரசுப் பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க வேண்டும். பயிற்சிக்குப் பிறகு அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் தொன்மை பாதுகாப்பு மன்றங்களை அமைக்குமாறு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றார். இவர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. களப்பயணமும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.


Click here to join whatsapp group for daily kalvinews update 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி

IMG-20221112-WA0002

அரசு பள்ளி ஆசிரியருக்கு 6 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி

 தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தமிழகமெங்கும் பரவி இருக்கும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சோக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிடப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.

6 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சிக்கு ஒரு குழுவிற்கு 40 ஆசிரியர்கள் வீதம் 25 குழுவாக மொத்தம் 1.000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 40 ஆசிரியர்கள் வீதம் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். உண்டு உறைவிட பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் மன்ற செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டிருக்க வேண்டும்,

தமிழர் நாகரீகம், பண்பாடு, தொன்மை, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை வெளிக்கொணர்வதில் பங்காற்றிய அனுபவம் இருக்க வேண்டும். தொல்லியல் மற்றும் வரலாறு பாடங்களில் ஆர்வமும், விருப்பமும் உள்ளவராக இருக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

Carrier Guidance - ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 

உயர் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் சார்ந்து முதுகலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 SCERT - Carrier Guidance.pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பண்பாடு, கலாசாரம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

 அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழர் பண்பாடு குறித்து, தொல்லியல் துறை வழியே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, மாதந் தோறும் பல்வேறு வகை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.


இந்த வரிசையில், ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தொல்லியல் துறை வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.


இதற்கு, வருவாய் மாவட்ட வாரியாக, தலா, 40 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுதும், 1,460 பேருக்கு, தொல்லியல் துறையின் நிபுணர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சிக்கு, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


பண்டைய தமிழர் நாகரிகம், கலாசாரம், வாழ்வு முறை, தொன்மை மற்றும் அதன் சிறப்புகளை, மாணவர்களுக்கு எடுத்துரைப்பது, வரலாறு பாடங்களில் தொல்லியல் சார்ந்த கருத்துகள் இந்த பயிற்சியில் இடம்பெறும்.


மேலும், எளிதில் புரியும் வகையில் பாடம் நடத்துவது குறித்தும், இந்த பயிற்சியில் விளக்கப்படும் என, ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துஉள்ளது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

இஸ்ரோவின் கல்வி திட்டத்தில் அரியலூர் அரசு பள்ளி மாணவர்

 இஸ்ரோவின் விண்வெளிக் கல்வித் திட்டத்தில் பங்கு பெற அரியலூர், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா உட்பட 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்றுமுதல் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


இஸ்ரோவின் விண்வெளி கல்வி திட்டத்தில் பங்கு பெற தமிழகத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 75 பேர் கடந்த ஆகஸ்டு மாதம் தேர்வுசெய்யப்பட்டனர். நாட்டின் 75-வதுசுதந்திர தினத்தை ஆண்டு முழுவதும்கொண்டாடும் விதமாக, இஸ்ரோ 75 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவும் மெகா திட்டத்தைசெயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் தமிழகம் சார்பில், ‘அகஸ்தியர்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் 26 மாவட்டங்களில் இருந்து 5,000 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் இருந்து 75 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதில், அரியலூர் மாவட்டம், கவரப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவர் சஞ்சய் வேலா தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி டாக்டர். சிவதாணு, செயற்கைக்கோள் விஞ்ஞானிகள் ஆர்.எம். வாசகம், இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த வகுப்புகளை ஆன்லைன் மூலம் எடுத்தனர். தேர்வு செய்யப்பட்ட 75 மாணவர்கள் இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ. நிலையங்களில் நேரடியாக நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் இன்று (நவ.2) பங்கேற்க உள்ளனர்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

 


1460 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் துறையுடன் இணைந்து பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

SCERT - Carrier Guidance Training

 




உயர்கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உண்டு, உறைவிடப் பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!


Click Here to Download - SCERT - Carrier Guidance Training - Proceedings - Pdf



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு RC post அனுமதிக்கப் பட்ட ஆணை

 


பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு அலுவலகப் பணியாளர்கள் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டது வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை


BEO Office RC Post Proceeding - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி

 


TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் புதிய செயல்முறைகள்

 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்...


leadership training to HeadMasters Proceedings - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

ஆசிரியர்களுக்கான CRC தேதி மாற்றம்!!!

 8.10.22. நடைபெற இருந்த CRC கூட்டம் (6முதல் 10ஆம் வகுப்புகள்)15.10.22 அன்று நடைபெறும் என SCERT அவர்கள்  இயக்குனர் உத்தரவு.



தலைமை ஆசிரியர்களுக்கு செப்.7 முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி

 பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள், முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு பணித்திறன் மேம்பாடு, தலைமை திறன், மேலாண்மை தொடர்பாக ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி (Residential Training) அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி, இந்த கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி முகாம் ஆகஸ்ட் 22 முதல் 27-ம் தேதி வரை விருதுநகரில் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தலைமை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 7 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து, பயிற்சியில் தவறாமல் பங்கேற்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

HM-களுக்கு 1st schedule தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 HM-களுக்கு 1st schedule தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் ,



 " பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமைத்துவம் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் " என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-23 ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு , முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.








Click here to Join WhatsApp group for Daily kalvi news 

27.08.2022 CRC Facilitators Videos

 27.08.2022 CRC Facilitators Videos


CRC Facilitators  பார்க்க வேண்டிய -Content & 10 videos


CRC MEETING ATTENDENCE IN TNSED APP - Download here


CRC MEETING INTRODUCTION - Download here


MEDIAWIKI - Download here


Exemplar Content for Previous Month - Download here


LAST MONTH LESSON REVIEWS - Download here


NEXT MONTH LESSON EXAMPLARS - Download here


NEXT MONTH LESSON OVERVIEW - Download here


PSYCHOMETRIC GAME - Download here


STAGE SETTING ACTIVITY - Download here


ORIENTATION MEETING FOR FACILITATOR - Download here


Course for CRC/BRC Facilitators - Download here


 Click here to Join WhatsApp group for Daily kalvi news 

முதுகலை ஆசிரியர்களுக்கு இம்மாதம் CRC இல்லை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

  முதுகலை ஆசிரியர்களுக்கு இம்மாதம் (ஆகஸ்ட்) மட்டும் ஆசிரியர் கலந்தாலோசனைக் கூட்டம் (CRC) இல்லை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!

IMG_20220823_221006

IMG_20220823_221014


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 




2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்தன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.


 முதற்கட்டமாக , தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது.


இதன்பொருட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களை வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக , அவர்களை பணியிலிருந்து விடுவித்தும் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை தங்களது மடிக்கணினியுடன் 21.08.2022 அன்று மாலை 7.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து பதிவு தலைமை செய்யுமாறும் , மாவட்ட அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 


மேலும் , பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திரு.பி.சிவசக்தி கணேஷ்குமார் ( கைப்பேசி எண் .9442570306 , 9345570306 ) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ( ADPC ) முதன்மைக் கல்வி அலுவலகம் , விருதுநகர் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

CRC ( 16.07.2022 ) - Feedback & Assessment Link

ஒவ்வொரு ஏதுவாளரும்(Facilitator) தங்கள் பயிற்சி அறையில் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். 
   

FEED BACK SESSION

 மாலை செயல்பாடுகளை முடித்தபிறகு TNSED APPல் உள்ள FEEDBACK OPTION ல் சென்று  ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுடைய feedback ஐ  அவசியம் பதிவு செய்திட வேண்டும்.


ASSESSMENT SESSION

 FEEDBACK யை முடித்த பிறகு கீழே websiteல் ஆசிரியர்கள் தங்களுடைய USERNAME PASSWORD யை பயன்படுத்தி  அதில் வருகின்ற கேள்விகளுக்கு(ASSESSMENT) விடை அளித்து SUBMIT செய்ய வேண்டும்.


https://exams.tnschools.gov.in/login


குறிப்பு:

மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை,  Assessment-யை இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.


Click here to Join WhatsApp group for Daily kalvi news