Showing posts with label career Guidence. Show all posts
Showing posts with label career Guidence. Show all posts

பொறியியல் கவுன்சலிங்: சிறந்த கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?

 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் பொறியியல் கவுன்சலிங் தொடங்க உள்ளது. இந்தநிலையில், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர்கள் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்து, முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் செயல்முறை தொடங்கும்.

இந்தநிலையில், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சிறந்த பொறியியல் கல்லூரிகளை எப்படி தேர்வு வேண்டும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.

அதில், முதலில் பெற்றோர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளை நேரில் சென்று பார்வையிட வேண்டும். மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை சரிபார்க்க வேண்டும்.

பின்னர் அங்கு படிக்கக் கூடிய மாணவர்களிடம் கல்லூரி பற்றிய கருத்துக்களை கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரி கலாச்சாரம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்

கல்லூரியின் வேலை வாய்ப்பு நிலவரம் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கல்லூரியின் ஆவரேஜ் வேலை வாய்ப்பு சம்பளம் குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

தொழில் நிறுவனங்களுடன் கல்லூரி கூட்டாண்மை வைத்துள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்

கல்லூரியின் சுற்றுப்புற சுத்ததை கவனியுங்கள். நல்ல படிப்புச் சூழலுக்கான வாய்ப்பு உள்ளதா என கவனியுங்கள்.

அதிக நன்கொடை வாங்கும் கல்லூரி சிறந்த கல்லூரி என நினைக்க வேண்டாம். டாப் கல்லூரிகள் ஒரே அளவில் வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கல்லூரியின் கடந்த கால நற்பெயருக்காக சேர வேண்டாம். சிறந்த அறிவை வழங்குகிறார்களா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளாக சிறந்த கல்லூரி என பெயர் பெற்ற கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள்

கல்லூரியின் ஆசிரியர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி, அவர்களுக்கு சம்பளம் சரியான அளவில் கொடுக்கப்படுகிறதா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய மகன் அல்லது மகள் 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெறுவார் என்று நீங்கள் நினைத்தால், மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்குச் செல்லலாம்.

கல்லூரிகளுக்கு நேராகச் செல்லுங்கள், இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்

மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேரும்போது சிறந்த கல்லூரிகளுடன் சிறந்த பாடப்பிரிவுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். 150 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு குறைவாக எடுக்க வாய்ப்பிருந்தால், மேனேஜ்மெண்ட் கோட்டாவை முயற்சிக்கலாம்.

 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்: யார் படிக்கலாம்? எதிர்காலம் எப்படி?

 பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சமீபகாலமாக மாணவர்கள் அதிகம் விரும்பும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பை யார் படிக்கலாம்? வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்? போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கும். சமீபகாலமாக பொறியியல் படிப்புக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை மாணவர்கள் அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்புக்கு அதிக ஆர்வம் உள்ளது.

இந்தநிலையில், ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பு எப்படிப்பட்டது? யார் படிக்கலாம்? என்பதை கல்வி ஆலோசகர் சுரேஷ் சீதாராமன் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

உலகம் இணையத்தில் இணைந்துள்ள நிலையில், அதிகமான தரவுகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதனை நிர்வகிக்க ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் தேவைப்படுகிறது.

ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் படிப்பை கணித திறமை அதிகம் உள்ளவர்கள், கூர்நோக்கு சிந்தனை கொண்டவர்கள், புள்ளியியல் தரவுகளில் ஆர்வமுடையவர்கள், மற்றும் புத்தாக்க சிந்தனை கொண்டவர்கள் படிக்கலாம்

ஆட்டோமேசன், சைபர் செக்யூரிட்டி, ஹெல்த் கேர், ஏவியேசன், ராக்கெட் தொழில்நுட்பம், வங்கி போன்ற பல்வேறு துறைகளில் அல்கரிதம் எக்ஸ்பர்ட், டேட்டா அனாலிஸ்ட், டெவலப்பர், ரோபாட்டிக்ஸ் ஸ்பெசலிஸ்ட், ஆர்ட்டிஃபிஷியல் இன்ஜினீயர் அண்ட் சயின்டிஸ்ட் போன்ற வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளன




🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

பி.இ - பி.டெக்; எந்த இன்ஜினியரிங் படிப்பு சிறந்தது?

 தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பி. மற்றும் பி.டெக் படிப்புகள் என்பது என்ன? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன

 

இந்தநிலையில், பி. (B.E) மற்றும் பி.டெக் (B.Tech) படிப்புகள் என்ன என்பது பற்றியும் அவற்றிற்கு இடையிலான வேறுபாடுகள் பற்றியும் கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்

B.E என்பது Bachelor of Engineering (இளங்கலை பொறியியல்) மற்றும் B.Tech என்பது Bachelor of Technology (இளங்கலை தொழில்நுட்பம்) ஆகும். இரண்டுக்குமான படிப்பு கால அளவு 4 ஆண்டுகள் தான். இரண்டிலும் பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும்.

இரண்டு படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகள், அடுத்தக்கட்ட முன்னேற்றம் (career growth), வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் போன்றவை ஒரே அளவில் உள்ளன

..சி.டி. (AICTE), வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இரண்டு படிப்புகளையும் ஒரே தரத்தில் கருதுகின்றன. கல்வி நிறுவனங்கள் பாடப் பிரிவுகளை குறிப்பிடும் முறை மட்டுமே வேறுபடுகிறது. இரண்டு டிகிரிகளும் ஒன்றுதான்

இன்ஜினியரிங் என்பதுதான் படிப்பே தவிர, பி. அல்லது பி.டெக் என்பது பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும் பட்டம் மட்டுமே. எனவே குழப்பம் இல்லாமல் சிறந்த கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்ய கவனம் செலுத்துங்கள்

 

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News