மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் இன்று(செப்.,7) வெளியாகின்றன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17ல், நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது.நாடு முழுதும், 9.5 லட்சம் மாணவியர் உட்பட, 16 லட்சம் பேர் பங்கேற்றனர்.தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை இன்று...