School Education Department Policy Note 2022 - 2023

 



பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பு | Policy Note of School Education Department 2022-2023 Published

2022-2023 School Education Department Policy Note English.pdf - Download here

Click here to Join WhatsApp group for Daily kalvi news 

TNSED Attendance App - Exclusive Version Update ( 4.0 )

 


Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.



 TNSED Attendance App 4.0 - New Update Link - Update here... ( 26.10.2022) 


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!

 


அக்டோபர் மாதத்திற்கான SMC கூட்டம் - மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல்கள்!


SPD - Oct Smc Proceedings - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

 

பகுதி நேர பயிற்றுநர்கள் விவரங்களை EMIS இணையதளத்தில் 28.10.2022க்குள் பதிவேற்றம் செய்ய மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!

_அவர்களுக்கு (PTI) விரைவில் மாறுதல் கலந்தாய்வு!


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

அனைத்து வகை ஆசிரியர்களும் (1 to 12) PINDICS படிவத்தை EMIS இணையத்தில் இன்று (21.10.2022) முதல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - SPD செயல்முறைகள்!

 


அனைத்து வகை ஆசிரியர்களும் (1 to 12) PINDICS படிவத்தை EMIS இணையத்தில் இன்று (21.10.2022) முதல் பதிவேற்றம் செய்ய உத்தரவு - SPD செயல்முறைகள்!


SPD PINDICS Proceedings - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news 

குறில் நெடில் வார்த்தைகள் வண்ணப்படங்களுடன் (PDF)

 குறில் நெடில் வார்த்தைகள் வண்ணப்படங்களுடன் (PDF)


Click here to download pdf file

வகுப்பு 6 முதல் 12 வரை இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

 

வகுப்பு 6 முதல் 12 வரை இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை - முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்



Click here to Join WhatsApp group for Daily kalvi news 

110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து முதலமைச்சரின் அறிவிப்பு!!!

 110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சார்ந்து முதலமைச்சரின் அறிவிப்பு!!!


பள்ளி மாணவர்களுக்கான விநாடி வினா போட்டி அக் .22 - க்குள் பதிவு செய்ய வேண்டும்

 ' என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ' , ' இந்து தமிழ் திசை ' நாளிதழ் இணைந்து , ' கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2022 ' முன் னிட்டு பள்ளி மாணவ - மாணவி களுக்கான விநாடி வினா போட் டியை நடத்துகின்றன.


4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :

 4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - அனைத்து பாட புத்தக வினா - விடைகள் :

1. காவல்காரர் - DOWNLOAD HERE

2. எல்லாரும் இப்படியே  இருந்துவிட்டால்!  - DOWNLOAD HERE

3. யானைக்கும் பானைக்கும் சரி  - DOWNLOAD HERE

4. நன்னெறி  - DOWNLOAD HERE

5. பனிமலைப் பயணம் - DOWNLOAD HERE 

6. ஆராய்ந்திட வேண்டும்  - DOWNLOAD HERE 

7. திருக்குறள் கதைகள் - DOWNLOAD HERE 

8. பசுவுக்குக் கிடைத்த நீதி  - DOWNLOAD HERE 

 9. வேலைக்கேற்ற கூலி - DOWNLOAD HERE 

4- ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - காவல்காரர் - வினா - விடைகள்

 தமிழ் 

இரண்டாம் பருவம்

1. காவல்காரர் 

பக்கம் 3

பாடல் பொருளை உமது சொந்த நடையில் கூறுக.

விடை :  தோட்டத்தின் நடுவில் மேலே கோட்டுடனும் சரிகை வேட்டியுடனும் காவல்காரர் நின்றிருந்தார். இரவும் பகலும் காவல் காத்து வந்தார். காக்கை குருவிகள் அங்குள்ள காவல்காரரைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி ஓடிவிடும். ஒருமுறை பலத்த மழை பெய்தபோது காவல்காரரின் ஆடைகள் கிழிந்திருந்தது. காவல்காரருக்கு உதவி செய்தால் தான் அச்சமின்றி உலா வரலாம் என எண்ணிய காகம் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று கறுப்புக் கோட்டு, வெள்ளைச் சட்டை, கட்டிக் கொள்ள சரிகை வேட்டி எடுத்து வந்து காவல்காரரிடம் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னது. 

 காவல்காரர் புதிய ஆடையை ஆவலோடு பார்க்கவில்லை, பழைய ஆடையைக் கழற்றிப் போடவில்லை. கொஞ்சம்கூட அசையவில்லை. காகம் அருகில் சென்று உற்றுப் பார்த்தவுடன்தான் அங்கிருந்தது சோளக்கொல்லை பொம்மை என்று அப்போது தெரிந்தது. வைக்கோலினால் ஆன பொம்மை என்பதைத் தன் நண்பர்களிடம் சொல்வதாகக் கூறிப் பொம்மையின் தலையில் நின்று மற்ற பறவைகளையும் கூவி அழைக்கிறது.

பக்கம் 4

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்! 

 சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுவோமா? 

  1. ‘பெயரில்லாத’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………………….

 அ) பெயர் + இலாத         ஆ) பெயர் + இல்லாத        இ) பெயரில் + இல்லாத                   ஈ) பெயரே + இல்லாத 

விடை: 

 ஆ) பெயர் + இல்லாத 

 2. வைக்கோல் மேலே துணியைச் சுற்றி வைத்திருக்கும் பொம்மை இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் எதிர்ச்சொல்………………… 

அ) கீழே ஆ) அருகில் இ) தொலைவில் ஈ) வளைவில்

அ) கீழே

 3. ‘சோளக்கொல்லைப் பொம்மை’ என்பது…………………… 

அ) உயிருள்ள பொருள் ஆ) உயிரற்ற பொருள் இ) இயற்கையானது ஈ) மனிதன் செய்ய இயலாதது

ஆ) உயிரற்ற பொருள்

4. அசைய + இல்லை – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது……………….

 அ) அசைய இல்லை ஆ) அசைவில்லை இ) அசையவில்லை ஈ) அசையில்லை

விடை :  இ) அசையவில்லை 

 5. நித்தம் – இச்சொல்லுக்குரிய பொருள்……………………. 

அ) நாளும் ஆ) இப்பொழுதும் இ) நேற்றும் ஈ) எப்பொழுதும் 

விடை: அ) நாளும்

PREPARED BY THULIRKALVI TEAM

வினாக்களுக்கு விடையளிக்க

 1. தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் யார்? 

விடை: தோட்டத்தின் நடுவே ராஜா போல் நின்றவர் சோளக்கொல்லைப் பொம்மையாகிய காவல்காரர்.

 2. காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி யாது?

விடை: காவல்காரருக்குத் தோட்டத்தில் உள்ள பணி, இரவும் பகலும் வயலில் நின்று காவல் காப்பதாகும்.

3. பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது யார்?

விடை: பொம்மைக்குக் கறுப்புக்கோட்டு, வெள்ளைச்சட்டை கொடுத்தது காகம்.

 4. காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் ஏன் அணியவில்லை? 

விடைகாவல்காரர் உயிரற்ற பொருள் என்பதால் காகம் கொடுத்த ஆடைகளைக் காவல்காரர் அணியவில்லை.


விடை : 

1. சரிகை வேட்டை 
2. கறுப்புக் கோட்டு 
3. வெள்ளைச் சட்டை
4. சோளக் கொல்லைப் பொம்மை 
5. கனத்த மழை.

பக்கம் 5
பாடலைத் தொடர்ந்து பாடுவோமா?

மக்கள் ஒன்று கூடியே
மகிழ விரும்பும் திருவிழா 
குழந்தைச் செல்வம் யாவுமே
 கூடிஆடும் திருவிழா 
குமரிப் பெண்கள் யாவரும் 
கூடிமகிழும் திருவிழா
கடைத் தெருக்கள் முழுவதும் 
கலைகட்டும் திருவிழா.

பக்கம் 6
உரைப்ப குதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

நமக்குப் பயன்தரும் பல மரங்களுள் வாழையும் ஒன்று. வாழையின் பூ, காய், கனி, தண்டு ஆகியவற்றை நாம் சமைத்து உண்கிறோம். வாழைநாரைக் கொண்டு பூக்களைத் தொடுக்கிறோம். திருமண விழாக்களிலும் வீட்டில் நடைபெறும் விழாக்களிலும் வாழையிலையில் விருந்து படைக்கின்றனர். வாழையில் செவ்வாழை, பூவன் வாழை, மலை வாழை எனப் பலவகைகள் உள்ளன.

1. வாழையின் எப்பகுதிகள் உணவாகப் பயன்படுகின்றன? 

விடை:  பூ, காய், கனி, தண்டு 

2. வாழைநார் எதற்குப் பயன்படுகிறது? 

விடை: வாழைநார் பூத்தொடுக்கப் பயன்படுகிறது. .

 3. வாழையின் வகைகளுள் இரண்டை எழுதுக.

 விடை:  செவ்வாழை, பூவன் வாழை  

 4. வாழையிலை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை:  வாழை + இலை

 5. பலவகை – இச்சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக. 

விடை:  சிலவகை.

PREPARED BY THULIRKALVI TEAM

செயல் திட்டம்
உங்கள் இருப்பிடத்திற்கு அருகிலிருந்து கீழ்க்காணும்
செய்திகளைத்திரட்டுக.

1. தோட்டத்தின் பெயர் 

விடை: இயற்கைத் தோட்டம். 

 2. உரிமையாளர் பெயர். 

விடை: சிவராமன்.

 3. தோட்டம் அமைந்திருக்கும் ஊர்

விடை:பருத்திப்பட்டு 

4. நீர்வசதி: கிணறு /அடிகுழாய்/ ஆறு/குளம். 

விடை: கிணறு. 

5. தோட்டத்தில் விளையும் காய்கறி/பழம் பெயரைக் குறிப்பிடுக.

 விடை:கீரை வகை, கத்தரிக்காய், வெண்டைக்காய், மாதுளம் பழம், சப்போட்டாப் பழம்.

6. தோட்டம் பற்றிய உனது கருத்து நன்றாக உள்ளது/ஓரளவு/ வளர்ச்சி தேவை. 

விடை: நன்றாக உள்ளது.

4 -ஆம் வகுப்பு - இரண்டாம் பருவம் - தமிழ் - 3. யானைக்கும் பானைக்கும் சரி - புத்தக வினா - விடைகள் மற்றும் கூடுதல் வினா விடைகள்

 பக்கம் - 19

 வாங்க பேசலாம்

1. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதையை உம் சொந்தநடையில் கூறுக.

 விடை :  மரியாதை இராமனிடம் வந்த விசித்திரமான வழக்கு இது. உழவரின் மீது அரபு வணிகர் தொடுத்த வழக்கு. ஓர் உழவர் தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக அரபு வணிகர் ஒருவரிடம் யானையை இரவல் கேட்டார். அவரும் கொடுத்தார். ஊர்வலத்தின்போது யானை இறந்துவிட்டது. அரபு வணிகர் யானையைத் திருப்பித் தரும்படி கேட்கிறார். உழவரோ, “யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துவிட்டதாகவும், மாற்றாக வேறு யானை வாங்கித் தருவதாகவும் அல்லது யானைக்குரிய விலையைத் தருவதாகவும் நான் கூறினேன். ஆனால் வணிகர் ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கிறார்,” என்று கூறினார். 

 யானைக்கும் பானைக்கும் சரி உண்மையை அறிந்த மரியாதை இராமன், இருவரையும் பார்த்து, “நீங்கள் இருவரும் நாளை நீதிமன்றத்திற்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். பின்னர் உழவரைத் தனியாக அழைத்து, தான் ஆள் அனுப்பும்போது வந்தால் போதும் என்றார். பிறகு அவரிடம், “வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள்” என்று கூறி அனுப்பி விட்டார். மரியாதை இராமன் கூறியபடி உழவர் செய்தார். வணிகர் உழவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்காக வேகமாக வந்து கதவைத் திறந்தார். பானைகள் விழுந்து உடைந்தன. உழவர் வணிகரிடம், “அப்பானைகள் காலங்காலமாக வைத்திருந்த பழம் பானைகள். இவற்றை உடைத்துவிட்டீரே, எனக்கு இதே பானைகளைத் திருப்பித் தாருங்கள்,” என்று சத்தமிட்டார். வணிகர் செய்வதறியாமல் திகைத்தார். வணிகர் நடந்ததை மரியாதை இராமனிடம் கூறினார். மரியாதை ராமன் வணிகரிடம் “நீங்கள் இறந்துபோன யானையை உயிருடன் திருப்பிக் கேட்கிறீர். அவர் உடைந்த பழம்பானைகள் வேண்டும் என்று கேட்கிறார். நீங்கள் பானையைக் கொடுத்தால் அவர் யானையைக் கொடுத்துவிடுவார்” என்று கூறினார். வணிகர் தன்னால் பழைய பானைகளைத் தரமுடியாது என்றார். மரியாதை இராமன் ”உங்களால் திருப்பித் தர முடியாது என்றால் அவரால் மட்டும் எப்படித் திருப்பித் தர முடியும்” என்றார். ஆதலால் யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது’ என்று தீர்ப்பளித்தார்.

 சிந்திக்கலாமா?

 உன் நண்பன் உன்னைத் தவறாகப் புரிந்துகொண்டு உன்மீது சினம் கொண்டால் நீ என்ன செய்வாய்?

 விடை : நான் அவனைச் சமாதானப்படுத்துவேன். என்ன நடந்திருந்தாலும் அவனிடம் உண்மை கூறிப் புரிய வைப்பேன். சினம் கொள்வதற்கான அவசியமில்லை என்று கூறுவேன். சினத்தை விடுத்து சிந்திக்க முயற்சி செய்யும்படி கூறுவேன். 

 வினாக்களுக்கு விடையளிக்க 

1. உழவர் யானையை எதற்காக இரவல் கேட்டார்? 

 விடை : உழவர், தம் மகன் திருமண விழாவில் ஊர்வலம் விடுவதற்காக யானையை இரவல் கேட்டார். 

 2. ஊர்வலம் சென்ற யானைக்கு என்ன நேர்ந்தது? 

 விடை :  ஊர்வலம் சென்ற யானை இறந்துவிட்டது. 

3. மரியாதை இராமன் உழவரைத் தனியே அழைத்து என்ன கூறினார்? 

 விடை :  மரியாதை இராமன் உழவரை தனியாக அழைத்து “நாளை நீங்களாகவே நீதிமன்றத்திற்கு வரவேண்டாம். அந்த வணிகரை உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறேன். அவர் வரும்போது உங்கள் வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்து, கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்திருங்கள். பின்னர், நடப்பதை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

 4. யானைக்கும் பானைக்கும் சரி என்ற கதை உணர்த்தும் நீதி என்ன?

 விடை : ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு. 

  பூக்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. வணிகர் ………………. நாட்டைச் சேர்ந்த வர். 

 விடை : அரபு 

 2. உழவர், வணிகர் இருவரின் வழக்கை எதிர்கொண்டவர்…………. 

 விடை :  மரியாதை ராமன்

 3. திருமண ஊர்வலத்தில் …………….. இறந்து விட்டது. 

 விடை : யானை 

 4. பழைய …………. கீழே விழுந்து நொறுங்கின. 

 விடை :  பானைகள்




பக்கம் - 20 
சொற்களை முறைப்படுத்திச் சரியான தொடரமைத்து எழுதுக.

 விடை :


 குறிப்புகளைப் பயன்படுத்திக் கதை உருவாக்குக.  பொருத்தமான தலைப்பிடுக. 

 நான்கு எருதுகள் – ஒற்றுமையாக வாழ்தல் – சிங்கம் – பிரிக்க நினைத்தல் – எருதுகள் எதிர்த்தல் – சிங்கத்தின் சூழ்ச்சி – எருதுகள் பிரிதல் – சிங்கம் வேட்டையாடுதல்.

 விடை :  ஒற்றுமையே பலம் ஒரு காட்டில் நான்கு எருதுகள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. அவை நான்கும் வலிமையுடன் இருந்தன. அக்காட்டில் வாழ்ந்த சிங்கம் இவர்களின் ஒற்றுமையைப் பார்த்து, எப்படியாவது இவைகளைப் பிரித்துவிட வேண்டும் என்று எண்ணியது. 

முதலில் ஒரு எருதைக் கொல்லலாம் என்று சிங்கம் சீறிப் பாய்ந்தது. ஆனால் மற்ற எருதுகள் சேர்ந்து சிங்கத்தைத் தம் கொம்புகளால் குத்தித் தாக்கின. வலியால் துன்புற்ற சிங்கத்திடம் நரி வந்து பேசியது. தந்திரமாக எப்படியாவது நான்கு எருதுகளையும் பிரிப்பதாகக் நரி கூறியது. 

அதேபோல் ஓர் எருதிடம் சென்று “உன் வலிமையால்தான் சிங்கம் பயந்து ஓடியது. மற்ற எருதுகளால் இல்லை ” என்று கூறியது. இதேபோல் ஒவ்வொரு எருதிடமும் கூறியது. எருதுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பிரிந்தன. அச்சமயம் பார்த்து சிங்கம் ஒவ்வொரு எருதாய்க் கொன்றது. எருதுகள் ஒற்றுமையாய் இல்லாததால் கொல்லப்பட்டன. 

  குறிப்புகளைக் கொண்டு கட்டத்திலிருந்து விடை காண்போமா?

 விடை :



 கூடுதல் வினாக்கள் 

 வினாக்களுக்கு விடையளிக்க. 

1. உழவர், மரியாதை இராமனிடம் என்ன கூறினார்?

விடை : “ஐயா, இரவலாக வாங்கிய யானை ஊர்வலத்தில் தற்செயலாக இறந்துபோய்விட்டது. அதற்குரிய விலையையாவது, மாற்றாக வேறு யானையையாவது, வாங்கித் தருகிறேன் என்று எத்தனையோ முறை கூறிவிட்டேன். ஆனால், இந்த வணிகர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இறந்துபோன அதே யானைதான் வேண்டுமென அடம்பிடித்தால் நான் என்ன செய்வேன்?” என்று வருத்தத்துடன் உழவர் கூறினார். 

2. உழவருக்கு மரியாதை இராமன் சொன்ன யோசனை யாது?

விடை :  வீட்டுக் கதவிற்குப் பின் பழைய பானைகளை அடுக்கி வைத்தல். கதவைத் தாழ்ப்பாள் போடாமல் வைத்தல். இவற்றைச் செய்தால் போதும் என்று உழவருக்கு மரியாதை இராமன் கூறினார். 

 3. மரியாதை இராமன் என்ன தீர்ப்பு அளித்தார்? 

விடை :  வணிகர் இறந்துபோன தனது யானையைக் கேட்டார். உழவர் உடைந்துபோன பானைகளைக் கேட்டார். இரண்டுமே திரும்பப் பெற முடியாதவை. இறந்துபோன யானை மீண்டும் உயிர்பெற்று வர இயலாது என்பதை மரியாதை இராமன் உணர வைத்தார். யானைக்கும் பானைக்கும் சரியாகப் போய்விட்டது என்று அவர் தீர்ப்பு அளித்தார்.