School Morning Prayer Activities - 09.09.2025

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.09.2025

திருக்குறள் 

குறள் 503: 


அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் 

இன்மை அரிதே வெளிறு.  


விளக்க உரை: 


அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.


பழமொழி :

A journey of kindness never ends.    


அன்பின் பயணம் ஒரு போதும் முடிவதில்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


1 என்னால் இயன்ற அளவு மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பேன்.


2 இயற்கை சமநிலை காப்பேன்.


பொன்மொழி :


ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை படிப்படியாக அடைதலே வெற்றியாகும் -  நைட்டிங்கேல்


பொது அறிவு : 


01. தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் யார்?


             எம். பாத்திமா பீவி


M. Fathima Beevi,


02.மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? 


      ஹிப்போகிரேட்டஸ் -Hippocrates


English words :


Run out off – nothing left, எல்லாம் காலி ஆகி விட்டது


Grammar Tips: 


 If You ,third person singular and I comes as subject we have to follow as 

2nd person+3rd person singular+I


Example 

You,Ramu and I got this book


அறிவியல் களஞ்சியம் :


 உலகில் புதிதாக ஒரு நீல மண்டலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நீல மண்டலம் என்பது உலகின் மற்ற பகுதிகளின் சராசரி ஆயுட்காலத்தை விட அதிகம் இருக்கும் பகுதி. இங்கு 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் இருப்பர். உலகில் ஏற்கனவே லோமா லின்டா - அமெரிக்கா, நிகோயா - கோஸ்டாரிகா, சர்டின்யா - இத்தாலி, இகரியா - கிரீஸ், ஒகினவா - ஜப்பான் ஆகிய ஐந்து இடங்கள் நீல மண்டலமாக வரையறுக்கப்பட்டு உள்ளன. தற்போது இந்த வரிசையில் பின்லாந்தின் அஸ்ட்ரோபோதின்யா பகுதி இடம் பெற்றுள்ளது என தெரிவித்துள்ளனர்.


செப்டம்பர் 09


மா சே துங்  அவர்களின் நினைவுநாள்


மா சே துங் (Mao Zedong (உதவி·தகவல்), Mao Zedong, டிசம்பர் 26, 1893 – செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இளமையில் ஆறு மாத காலம் ராணுவ அனுபவம் பெற்றார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த 

கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்


நீதிக்கதை


 மகா கஞ்சனின் கதை


கந்தன் என்ற ஒரு மகா கஞ்சன், ஆலங்குடி என்ற ஊரில் வசித்து வந்தான். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு சென்றார். 


விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர். 


அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த விமானி ஒருவர், நீங்கள் இருவரும் வாருங்கள் ஆளுக்கு நூறு ரூபாய் தான் வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம் என்றார். கஞ்சனுக்கு ஆர்வம் தான். ஆனால் செலவுக்கு பயந்து நாங்கள் வரவில்லை, என்றான். 


அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, நீங்கள் எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டால், இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும் என்றார். 


கஞ்சன் தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான். விமானம் தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சத்தம் போடாமல் இருந்தான். விமானத்தைத் தரை இறக்கினார் விமானி. 


கஞ்சனுக்கு கை கொடுத்து, நான் பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, வேறு யாராக இருந்தாலும் சத்தம் போட்டுருப்பார்கள். ஆனால், நீங்கள் சிறு சத்தம் எழுப்பவில்லை. எப்படி இது உங்களால் முடிந்தது? என்று கேட்டார் விமானி. 


நான் கூட, ஒரே ஒரு சமயம், என் மனைவி, விமானத்தில் இருந்து கீழே விழுந்தபோது! கத்த நினைத்தேன். நல்லவேலை கத்தாமல் இருந்தேன். கத்தியிருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிருக்கும் என்றான் கஞ்சன். அதை கேட்ட விமானி மயங்கி விழுந்தார். 


நீதி :


சிக்கனம் இருக்கலாம் ஆனால், கஞ்சத்தனம் இருத்தல் கூடாது.


இன்றைய செய்திகள் - 09.09.2025


⭐TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


⭐ குளங்களைத் தூர்வாரி, தண்ணீர் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.


⭐ கேரளாவில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 பேர் இறந்திருப்பது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


🏀 விளையாட்டுச் செய்தி


ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.


🏀இந்தியா- பாகிஸ்தான் போட்டி வருகிற 14ஆம் தேதி நடக்கிறது.


Today's Headlines


⭐Extension of the deadline to apply for Tn TET exam. 


⭐The Chennai corporation has started the work of dredging the ponds and increasing the water capacity.


⭐ The death of 5 people due to amoebic encephalitis in Kerala has created fear among the people of Kerala. 


 *SPORTS NEWS* 


🏀 Shubman Gill appointed as the vice-captain of the Indian team for the Asia Cup series.


🏀The India-Pakistan match will be held on the 14th.


Covai women ICT_போதிமரம்


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2 ஆண்டுகளில் 6 TET தேர்வுகள் நடத்த திட்டம்

 IMG_20250908_183110

ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தவறாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து.


 தமிழக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 6 TET தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 


இதுவரை 12 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே TET நடந்த நிலையில் , இனி ஆண்டுக்கு 3 முறை தேர்வு நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது . தற்போது தேர்ச்சி விகிதம் வெறும் 4.5 சதவீதமாக உள்ளது .


 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

2027 ஆம் ஆண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடரும்...

 IMG-20250610-WA0021

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

 2025-2027 ஆம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , எண்ணும் எழுத்தும் சார்ந்து 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு ( 1 முதல் 3 ஆம் வகுப்பு ) தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு ( 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ) முதல் பருவத்திற்கான பாடப்பொருள் உருவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில் 2025 2026 ஆம் கல்வியாண்டில் , 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சியினை 09.06.2025 முதல் 13.06.2025 முடிய நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Smart Class room guidelines -திறன்மிகு வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்

 9Th%20Social%20Science%20Study%20Material%20and%20Guide_20250610_180412_0000

திறன்மிகு வகுப்பறை - பராமரிப்பு வழிகாட்டுதல்கள்

👇👇👇👇

Smart Class room guidelines - Download 


🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

BEO Pay Fixation Clarification by DEE

 IMG_20250610_094623

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தின் பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்யப்பட்டது 07.02.2019 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராக பணிமாறுதல் மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்வது சார்ந்து தெளிவுரை கோரப்பட்டமை - தெளிவுரை வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 

!

DEE - BEO Pay Fixation Clarification.pdf

👇👇👇👇

Download here

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த கையேடு

 IMG_20250610_195748

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்த கையேடு

👇👇👇👇

Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

MHM To BEO - தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மீள பிடித்தம் செய்வது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

 IMG_20250610_203539

07.02.2019 முன்பாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து வட்டார கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மீள பிடித்தம் செய்வது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

👇👇👇👇

Dir Proceedings - Download here



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு ஆணை

IMG_20250610_151640

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளிகளில் 25 % இடங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு ; 25 % ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கவில்லை ; உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீது உத்தரவு🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது - விண்ணப்பிக்க யுஜிசி அழைப்பு

 கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப் படுகின்றன. கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் 2023-ம் முதல் வழங்கப்படுகிறது.


நடப்பாண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி சமீபத்தில் வெளியிட்டது. அதன் விவரம்: 2025-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் துணை வேந்தர்கள் விண்ணப்பிக்க முடியாது. இது தவிர விண்ணப்பிப்பவர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முழு நேர ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.


ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக் கூடாது. கல்வியாளர்கள் உட்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதை குடியரசுத் தலைவர் டெல்லியில் செப். 5-ம் தேதி அளித்து கவுரவிப்பார். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 01129 581120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை www.ugc.gov.in/ எனும் வலைத்தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று யுஜிசி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

NEET UG தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி வெளியிடப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

 NEET

நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.


மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.


இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது. வரும் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை 

neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று,

 ‘NEET UG 2025 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்களுக்கு (எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட) மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்தும். மீதமுள்ள 85% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

Class 4&5 - Term 1_English - 2025 -26.pptx Module

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? - முழு விவரம் இதோ !

 CBSE Class 10, 12 results 2024 Updates: 2024ம் கல்வியாண்டிற்கான 10, 12ம் வகுப்பு  தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் வெளியிட இருக்கிறது.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புக்கான  பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கியாது. 10ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 13ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கான தேர்வு ஏப்ரல் 2ம் தேதி வரையிலும் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ வாரியத்தின், cbse.nic.in , cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளண்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, cbseresults.nic.in ,  results.cbse.nic.in
cbse.nic.in ,  digilocker.gov.in , results.gov.in ஆகிய இணையத்தளங்களில் தங்களது பதிவெண்  மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும், 2016ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ வாரியம் தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கரில் பதிவேற்றம் செய்து வருகிறது. டிஜிட்டல் லாக்கர் என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாகும். டிஜி லாக்கர் அசல் ஆவணங்களின் பாதுகாப்பான டிஜிட்டல் பதிவை கிளவுட்டில் வைத்திருக்க உதவுகிறது.


டிஜிலாக்கர் இணையதளத்திற்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணையும், கடவுச் சொல்லையும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில், தேர்வு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், UMANG என்ற செயலியின் மூலமும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி, கூகுள் பிளே ( ஆன்ட்ராய்டு போன்களுக்கு) ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் ( ஐ போன்களுக்கு) ஆகியவற்றில் கிடைக்கும்

இதுதவிர, ஐவிஆர்எஸ் சேவைகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். டெல்லியில் உள்ள மாணவர்கள் 24300699 என்ற எண்ணுக்கும், டெல்லிக்கு வெளிப்புறம் உள்ள மாணவர்கள் 011 – 24300699 என்ற எண்ணுக்கும் அழைத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

நீட் தேர்வு 2024 ஹால் டிக்கெட் இன்று ரிலீஸ்: டவுன்லோட் செய்வது எப்படி?

 இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை இன்று (மே 1ஆம் தேதி) தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வு மே 5, ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 நீட் தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

படி 1: தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்https://nta.ac.in/ 

படி 2: "NEET UG 2024 அட்மிட் கார்டு"க்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு பின்னை உள்ளிடவும்.

படி 4: உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைச் சமர்ப்பித்து அட்மிட் கார்டைப் பதிவிறக்கவும்.

படி 5: எதிர்கால குறிப்புக்காக அட்மிட் கார்டின் நகலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தேர்வு மையத்திற்கு செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றிதழுடன் உங்கள் ஹால் டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஹால் டிக்கெட்டில், தேர்வரின் பெயர், தேர்வு எண், தேர்வு தேதி மற்றும் நேரம், தேர்வு மைய முகவரி, தேர்வு நாளுக்கான முக்கிய வழிமுறைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

ஹால் டிக்கெட் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு தேசிய தேர்வு முகமை இணையதளத்தைப் பார்க்கவும். ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி டவுன்லோட் செய்துக் கொள்ளவும்



🔻🔻🔻🔻

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News