3% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.

 



ORDER :In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below :

GO NO : 254 , DATE : 18.08.2022 - Download here


Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது சென்னை, கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. 

மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. 

தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியுள்ளார்.

அகவிலைப்படி அரசாணை எப்போது வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!! செய்தி குறிப்பு எண்-1421

 அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு.



மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 75 - வது சுதந்திர தின உரையில் , ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று , கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.


இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும்.

அரசாணைகள் விரைவில் தனித்தனியே அரசு இதற்கான வெளியிடப்படும் . 

  

Click here to Join WhatsApp group for Daily kalvi news

தற்காலிக ஆசிரியர்கள் இருப்பின் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணி விடுப்பு செய்திட இயக்குநர் உத்தரவு.

 2021-2022 கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதிலி ஆசிரியர்கள் வருகை யின்மை  காரணமாக விடுவிக்கப்படாமல் இருப்பின்.. அப்பணியிடத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருப்பின்.. 

மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் பணி விடுப்பு செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!



Click here to Join WhatsApp group for Daily kalvi news

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - 17.8.2022 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பு!

IMG_20220816_224415

IMG_20220816_224425

 மாணவர்களிடையே புத்தகம் வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் ஒவ்வொரு வாசிக்கும் பழக்கத்தை செயல்பட்டு நூலகப் பாடவேளை இப்பாடவேளைகளை வருகின்றன. வகுப்புக்கும் வாரமொருமுறை வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களை தீட்டியுள்ளது. 
சிறந்த நூலகங்கள் இத்திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8 , 9-10 , 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம் . அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம் . 

படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம் . அதை வைத்து ஓவியம் வரையலாம் . நாடகம் நடத்தலாம் . கலந்துரையாடல் செய்யலாம் . நூல் அறிமுகம் , புத்தக ஒப்பீடு , மேற்கோள்கள் குறிப்பிடுதல் , கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் , புத்தகம் தன் கதை கூறுதல் மற்றும் குறு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் என மாணவர்களின் இது போன்ற படைப்புகள் பள்ளிகளில் சேகரித்து வைக்கப்படும் . 

இவற்றில் படைப்புகளைத் தந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வைக்கப்படுவர் . அதில் வெல்பவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் . 

மாவட்ட அளவில் வெல்பவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் முகாமில் கலந்துகொண்டு போட்டிகளில் பங்கெடுக்கலாம் . ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 3 பேர் என்கிற வகையில் 114 பேர் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கவிருக்கும் முகாமில் பங்கேற்பார்கள் . இம்முகாமில் தலைசிறந்த பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்களைக் கொண்டு அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும் . இந்நாட்களில் குழந்தை எழுத்தாளர்களுடன் மாணவர்கள் உரையாடும் வாய்ப்பும் ஏற்படுத்தப்படும் . 
மேலும் , மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவர்களின் புத்தக அனுபவப் பகிர்வுகளும் நடைபெற இருக்கின்றன. 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

1, 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது... தமிழக பள்ளிக்கல்வித் துறை

 1,2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும் பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1,2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

8th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

8th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

8th MATHS TM : CLICK DOWNLOAD


8th MATHS EM : CLICK DOWNLOAD


Click here to Join WhatsApp group for Daily kalvi news

7th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

7th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

7th MATHS TM : CLICK DOWNLOAD


7th MATHS EM : CLICK DOWNLOAD


Click here to Join WhatsApp group for Daily kalvi news

6th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)

6th MATHS (TM & EM) Lesson Plan August 3rd Week (16.08.22 TO 18.08.22)


6th MATHS TM :  Click Here To Download


6th MATHS EM : Click Here To Download


Click here to Join WhatsApp group for Daily kalvi news

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறை தொடரும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.


இதனைத் தொடர்ந்து சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், " சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள். நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்" என்றார்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," கல்வித் தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவரா என்பதை விட, அவருடைய செயல்பாடுகள் சரியாக உள்ளதா என்பதே முக்கியம். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நுழைந்துவிடாதபடி அரசு எச்சரிக்கையாகவே உள்ளது.


11 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும். அதில் குழப்பம் வேண்டாம். தனியார் பள்ளிகள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது" என்று கூறினார்.

School Morning Prayer Activities - 16.08.2022

 


Click here to download pdf file

Click here to Join WhatsApp group for Daily kalvi news

12th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

 12th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023


Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

10th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

10th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

11th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

 11th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

Click here to download pdf file


Click here to Join WhatsApp group for Daily kalvi news

9th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

 9th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023


Click here to Download Pdf file



Click here to Join WhatsApp group for Daily kalvi news

8th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

 

8th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023



Click here to Join WhatsApp group for Daily kalvi news

7th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023

 7th Std All Subjects Monthly Syllabus June to April 2022-2023


Click here to download pdf file 

Click here to Join WhatsApp group for Daily kalvi news


6th Std All Subjects Monthly Syllabus June to March 2022-2023

 6th Std All Subjects Monthly Syllabus June to March 2022-2023


Click here to Download Pdf File 

Click here to Join WhatsApp group for Daily kalvi news

மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின். பின்னர் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத்தொகை இன்று முதல் 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

குடும்ப ஒய்வூதியம் ரூ.9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். வழித் தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஒய்வூதியம் ரூ 9,000 லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு 1.07.22 முதல் அகவிலைப்படி 31% இருந்து 34% உயர்த்தி வழங்கப்படும்.

இதன்மூலம் 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடி  கூடுதலாக செலவாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டுகால தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

எளிமை, இனிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக் கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றல்களுகக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இனி ரூ.10ஆயிரம் வழங்கப்படும். காசியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும்.

கடந்த ஓராண்டில் தமிழக பல்துறை சார்ந்த வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என உள்ளிட்ட சாதனைகளை திமுக அரசு நிகழ்த்தி வருகிறது. செஸ் விளையாட்டுப் போட்டியையும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறோம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் பாதை (Career Path) திட்டம் - Press News

 

12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு IIT, மெட்ராஸ் மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து வழங்கும் தொழில் பாதை (Career Path) திட்டம்.


Press News pdf - Download here...


Click here to Join WhatsApp group for Daily kalvi news

ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

 10.03.2020க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Incentive Allowed Judgement - Download here



Click here to Join WhatsApp group for Daily kalvi news

TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில்கள்

 

நேற்று மாலை TN - EE MISSION TELEGRAM குழுவில் தொடக்கக்கல்வி இயக்குநருடன் VIDEO CHAT ல் நடைபெற்ற ஆசிரியர்கள் கேள்வி - பதில் கலந்துரையாடலில் ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு.அறிவொளி அவர்கள் மற்றும் SCERT இணை இயக்குனர் மதிப்புமிகு திருமதி.ஸ்ரீதேவி அவர்கள் அளித்த பதிலுரைகள் :


🔰 கேள்வி 1 : எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியர்கள் என்னென்ன பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்? மண்டல ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் 10 பதிவேடுகள் உள்ளடக்கிய CHECK LIST வைத்திருந்து அதில் உள்ள பதிவேடுகள் உள்ளதா என்று கேட்கிறார்கள்?.


📌 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:

 பாடக்குறிப்பு மட்டும் எழுதினால் போதும். அதற்கும் ஒரு Format வெளியிட்டுள்ளோம்.. ஆகவே அதை மட்டும் fill செய்தால் போதும்.. மற்ற WORK DONE , ACHIEVEMENT CHART, LEARNING OUTCOMES RECORD , C&D GRADE REGISTER என எதுவும் தேவையில்லை.. அதிகாரிகள் தவறான புரிதலில் உள்ளார்கள்.. இது குறித்து ஆசிரியர்களிடம் இருந்து நிறைய புகார்கள் வந்துள்ளதால் விரைவில் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கின்றோம்..

 

🔰 கேள்வி 2 : 

எண்ணும் எழுத்தும் வகுப்பறைக்கு TLM தயாரிக்க அதிக செலவாகிறது.. ஆகவே TLM தயாரிக்க நிதி ஒதுக்கி அதிலிருந்து ஆசிரியர்களுக்கு நிதி கொடுத்தால் நாங்கள் TLM செய்வதற்கு மிக உதவியாக இருக்கும்..

 

🔰 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:

 இதுவரை எவ்வளவு செலவழித்துள்ளீர்கள்..? 

📌 ஆசிரியர்:

 2500₹


📌 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:

 எண்ணும் எழுத்தும் திட்டம் வந்த பிறகு தான் TLM க்கு செலவாகிறது என்று தொடர்ந்து ஆசிரியர்கள் புலம்புகிறீர்களே... அப்போ இதற்கு முன் TLM இல்லாமல் தான் வகுப்பறைக்கு சென்றுள்ளீர்களா...? TLM இல்லாமல் வகுப்பறைக்கு செல்லக்கூடாது என்று ஆசிரியர்களாகிய உங்களுக்கு தெரியாதா.. ? B. Ed. & D. T. Ed., பயிற்சியில் எதற்காக TLM தயாரிக்க கற்றுக் கொடுத்தார்கள்.. அதெல்லாம் பயிற்சியோடு முடிந்துவிட்டதா.. மூன்று மாதங்களுக்கு ₹.2500 செலவழிக்க மாட்டீர்களா.. உங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் TLM தயாரிப்பதற்கும் சேர்த்து தான்.. இது செலவில்லை.. INVESTMENT.. நாம் எப்படி கல்வி கற்று வந்தோம்.. என்னுடைய அறிவியல் ஆசிரியர் பல்வேறு விதமான கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகளைக் கொண்டு கற்பித்தார்.. அவரைப் போன்ற ஆசிரியர்களால் தான் நான் இன்று இந்த பதவியில் இருக்கிறேன்.. நீங்களும் அது போன்ற ஆசிரியர்களிடம் பயின்றதால் தான் இன்று இந்த பணியில் உள்ளீர்கள்.. ஆகவே TLM தயாரிப்பதை செலவாக கருததீர்கள்.. நானும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி நிதி ஒதுக்குவது குறித்து பேசுகிறேன்.


📌 SCERT JD Madam:

பல கோடிகள் ஒதுக்கீடு செய்து எண்ணும் எழுத்தும் KIT கொடுத்துள்ளோம்.. ஆசிரியர்கள் அதை பயன்படுத்துங்கள்.. TLM என்றால் கடையில் விற்கும் chart உள்ளிட்ட பொருள்களை வாங்கி தயாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..  

Real objects பயன்படுத்துங்கள்.. நான் ஒரு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது ஒரு ஆசிரியர் வகுப்பறையில் Jasmine படத்தை chartல் வரைந்து ஒட்டியுள்ளார்.. 


இது வீண் செலவு இல்லையா.. நீங்கள் Jasmine காண்பிக்க விரும்பினால் சிறிது பூக்களை எடுத்துச் சென்று காண்பியுங்கள்.. முடிந்த வரை Real Objects எடுத்து செல்லுங்கள் LOW COST MATERIAL உபயோகியுங்கள்.. 


🔰 கேள்வி 3: 

உண்மைப் பொருள்களை எடுத்து சென்றால் அதை அன்றைய வகுப்பறையில் மட்டும் பயன்படுத்திவிட்டு எடுத்து விடுவோம்.. பார்வையிட அதிகாரிகள் வரும் போது வகுப்பறையில் TLM இருக்காதே.. அப்பொழுது நாங்கள் என்ன செய்வது?


📌 SCERT JD Madam:

 உங்களது பாடக் குறிப்பில் துணைக்கருவிகள் தலைப்பில் உண்மை மாதிரிகள் என்று குறிப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்.. அதிகாரிகளிடம் அதைக் காண்பித்தால் போதுமானது.. நீங்கள் உண்மையிலேயே பயன்படுத்தி இருந்தால் அவர்கள் குழந்தைகளிடம் விசாரிப்பார்கள்.. குழந்தைகள் பொய் கூற மாட்டார்கள்.. 


🔰 கேள்வி 4:  

பாடல் களத்தில் பாடல்களை எல்லாம் எழுதி வைக்க வேண்டுமா? பாடல்களை நாங்கள் கற்றுக் கொடுக்க போகிறோம் பின்பு எதற்கு பாடலை Chart ல் எழுதி வைக்க வேண்டும்?


📌 SCERT JD Madam :


  மீண்டும் மீண்டும் ஆசிரியர்கள் இதையே தான் கேட்கிறீர்கள்.. பாடல் களத்தில் எவ்வளவு பொருள்கள் வைக்க வேண்டியுள்ளது... கதைக் களத்தில் என்ன வைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் களங்களை நிரப்புவதில் தான் பதற்றமடைகிறீர்கள்.. களங்கள் என்பது மாணவனை Motivate செய்வதற்கு.. பாடல் களத்துக்கு நீங்கள் சென்று டம்மி மைக் எடுத்தால் மாணவன் மிகுந்த மகிழ்ச்சி ஆகி விடுவான் ... ஐ ஆசிரியர் பாடல் பாட போகிறார் என்று... அவன் மிகுந்த மகிழ்வுடன் பாடலை பாட முன் வருவான். கதை களத்தில் ஒரு Mask ஐ கொடுக்கும்போது அதை மாட்டிக்கொண்டு அவன் மகிழ்ச்சியுடன் அந்த விலங்காகவே தன்னை நினைத்து கதையை கூறுகிறான்..  

இவ்வளவு தான் நமக்கு தேவை..  

களங்கள் என்பது மாணவர்களுக்கு ஒரு Motivation காக மட்டுமே.. ஆகவே பாடல்களை எழுதி ஒட்ட வேண்டியதில்லை.. 


🔰 கேள்வி 5:

ஒரு ஆசிரியையின் பள்ளிக்கு இரண்டு தினங்களுக்கு முன் BEO பார்வையிட சென்றுள்ளார்.. அவர்கள் வகுப்பறையில் உள்ள சுவற்றில் 70% Fill பண்ணியுள்ளார்.. அதைப் பார்த்த BEO இது பத்தாது ஆகவே அவர்கள் வகுப்பறைக்கு அருகில் உள்ள LKG & UKG வகுப்பறை சுவற்றையும் நிரப்பி வையுங்கள் என்று கூறியுள்ளார்.. தற்போதைய பாடத்திற்கு தேவைப்படுவதை தாண்டி சுவற்றை மட்டும் நிரப்பி வைப்பது எப்படி சாத்தியமாகும்..?


📌 மதிப்புமிகு இயக்குனர் அவர்கள் பதில்:


 நீங்கள் Polite ஆக அந்த BEO விடம் என்ன மாதிரி ஒட்டலாம் என்று கூறுங்கள் என்று கேளுங்கள்..  

அவர்கள் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக சென்று விடுவார்கள்.. ஏனெனில் அவர்களுக்கே இதைப் பற்றி தெரியாது.. என்னடா BEOs பத்தி நாங்களே இப்படி சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்.. அவர்களுக்கு தற்போது தான் கொஞ்சமாக கொஞ்சமாக பயிற்சி கொடுக்கிறோம் நிறைய அலுவலர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லை.. நாங்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துகிறோம்..  


🔰 கேள்வி 6 : 

ஒரு தலைமை ஆசிரியரிடம் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் சந்தேகம் கேட்டுள்ளார்.. அது என்னவென்றால் மூன்றாம் வகுப்பில் உள்ள அரும்பு மாணவர்கள் அவர்களது பயிற்சி புத்தகத்தில் அரும்புக்கான செயல்பாடுகளை மட்டும் செய்வார்களா இல்லை அனைத்து செயல்பாடுகளும் செய்கின்றனரா? என்று கேட்டுள்ளார்.. ஆகவே மூன்றாம் வகுப்பு அரும்பு மாணவர்கள் எந்த செயல்பாடு செய்ய வேண்டும்?


📌 SCERT JD Madam:


அரும்புக்கான செயல்பாடு மட்டும் செய்தால் போதுமானது.. எழுத்துக்களே அறியாதவன் தான் அரும்பு மாணவர்.. ஆகவே அவர்களுக்கு மலர் புத்தகத்தில் உள்ள அனைத்து செயல்பாடும் செய்ய வேண்டியதில்லை..  


மேற்கண்ட கேள்விகளும் பதில்களும் அந்த VIDEO CHARTல் கலந்துரையாடப்பட்டது..

Click here to Join WhatsApp group for Daily kalvi news

தொடக்க வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம்! - பள்ளிக்கல்வித்துறை

 எண்ணும் எழுத்தும் சிலபஸ் படித்து, அடுத்த வகுப்புக்கு முன்னேறும், குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான ஆலோசனை, ஆசிரியர்களிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது.


இது களைய, தொடக்க வகுப்பு மாணவர்களை, பள்ளிக்கு ஆர்வமுடன் வரவழைத்து, கற்றல் திறன் மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டம், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பு வரை, பிரத்யேகமாக இத்திட்டத்திற்கு சிலபஸ் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடைமுறையில், பாடங்கள் சொல்லி கொடுப்பதால், மாணவர்கள் விளையாட்டு வழியாக, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கின்றனர். 


எண்கள், எழுத்துகளை அறிமுகம் செய்வதோடு, பிழையின்றி வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதத்திறனுக்கு, இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை முழுமையாக, ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து, நான்காம் வகுப்புக்கு முன்னேறி வரும் குழந்தைகளுக்கு, சிலபஸ் மாற்றியாக வேண்டும். இக்குழந்தைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ப, வகுப்பறை செயல்பாடுகள் இருந்தால்தான், பாடங்களை உள்வாங்குவதில் சிக்கல் ஏற்படாது.


இதற்காக, ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக முதன்மை கருத்தாளர்களாக செயல்படும், ஆசிரியர்களிடம் இதுசார்ந்து கருத்துகள் பெற்று, புதிய நடைமுறை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.முதன்மை கருத்தாளர்கள் சிலர் கூறுகையில், 'தொடக்க வகுப்பிலே, புதிய கற்றல் முறை கொண்டு வந்ததால், அடுத்தடுத்த வகுப்புகளில், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் புகுத்த வேண்டியது அவசியம். 


அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள், நான்காம் வகுப்புக்கு செல்லும் போது, புதிய நடைமுறைகள் கொண்டு வந்தால்தான், கற்றலில் தொய்வு இருக்காது. இது சார்ந்து, அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்துகள் பெற்ற பிறகு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.


Click here to Join WhatsApp group for Daily kalvi news

NMMS இலவச கையேடு வெளியீடு!PDF FILE

 ராமநாதபுரம் ஆசிரியர்.திரு.மோகன் அவர்களின் குழுவினரால் உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS போட்டித் தேர்விற்கான அறிவியல் & சமூகவியல் பாடங்களுக்கான கையேடு உருவாக்கப்பட்டு  மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.



அச்சுப் பிரதியாக மட்டுமின்றி 20 ஆசிரியர்களது உழைப்பின் பயன் 100% இலவசமாக மாணவ மாணவியர்களுக்குக் கிடைக்கும் வகையில் அதனை PDF வடிவிலும் வெளியிட்டுள்ளனர்.


அதற்கான இணைப்புகள் 
PDF FILE

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Ennum Ezhuthum - August 3rd Week Lesson Plan

  Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023

EE 8th Module 16.08.2022 - 19.08.2022

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


Click here to Join WhatsApp group for Daily kalvi news

2nd STD TO 5th Std C & D GRADE ACTIVITIES

2nd Std C & D GRADE ACTIVITIES Click here to download

3rd Std C & D GRADE ACTIVITIES Click here to download

4th Std C & D GRADE ACTIVITIES Click here to download
 
5th Std C & D GRADE ACTIVITIES Click here to download


Click here to Join WhatsApp group for Daily kalvi news

5 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வாசித்தல் , சொல்வது எழுதுதல் பயிற்சி ( அனைத்து அலகுகள் )

 

5 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வாசித்தல் , சொல்வது எழுதுதல் பயிற்சி ( அனைத்து அலகுகள் )


Click here to download 


 Click here to Join WhatsApp group for Daily kalvi news



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022

 


Click here to download pdf file


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

Independence Day Celebration - August 2018 ( School Special Day - Songs,Drawing Pictures)

Independence Day Celebration - August 2018 ( School Special Day - Speech, Songs, Essay, Poem, Drawing Pictures)

SONGS

Tamil Thaai Vaazhthu - Click here

JANA GANA MANA - Click here

Kodi Padal - Click here

MARCH PAST SONG - Click here

Vande Mataram (ORIGINAL) - Click here

Vande Mataram (LATA MAGESHKAR) - Click here

Ovvoru Pookalume - Click here

Acham Acham illai - Click here

India Naadu En Veedu - Click here

VAZHIYA SENTHAMIL - Click here

Drawing Competition 

Picture 1 - Click here

Picture 2 - Click here

Picture 3 - Click here

Picture 4 - Click here

Picture 5 - Click here

Picture 6 - Click here

 Click here to Join WhatsApp group for Daily kalvi news

எண்ணும் எழுத்தும் தமிழ் படித்தல் களம் உயிர் எழுத்துக்கள் அகர வரிசை முதல் ஒளகர வரிசை வரை வண்ணப் படங்களுடன்


எண்ணும் எழுத்தும் தமிழ் படித்தல் களம் உயிர் எழுத்துக்கள் அகர வரிசை முதல் ஒளகர வரிசை வரை வண்ணப் படங்களுடன்

Click here to download pdf file


 Click here to Join WhatsApp group for Daily kalvi news

ENNUM EZHUTHUM ENGLISH ALPHABETS (A.....Z WORDS)

 ENNUM EZHUTHUM ENGLISH ALPHABETS (A.....Z WORDS)


Click here to download Part 1

Click here to download Part 2


Click here to Join WhatsApp group for Daily kalvi news

மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை - வங்கிக் கணக்கு விவரங்களை EMIS Portal-ல் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!


Click here to download

Click here to Join WhatsApp group for Daily kalvi news

“மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு

 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்திற்குப் பதிலாக “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்” செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் - அரசாணை வெளியீடு


GO NO : 46 , DATE : 02.08.2022 - Download here...



Click here to Join WhatsApp group for Daily kalvi news