ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்!

 

பள்ளிக் கல்வி இயக்ககம் - ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்!

CEO Meeting Instructions - Download here...


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Morning Prayer Activities - 04.07.2023

 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

விளக்கம்:

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.


பழமொழி :
A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.

 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்”- ஹெய்டி ஜான்சன்.


பொது அறிவு :

1. நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?


விடை: ரவீந்திரநாத் தாகூர்.

2. டெல்லியில் செங்கோட்டையை கட்டிய முகலாய பேரரசர் யார்?


விடை: ஷாஜகான்.


English words & meanings :

 nostril - nose passage மூக்குத் துளை; odorous - sweet smelling நறுமணம்


ஆரோக்ய வாழ்வு :

மரவள்ளிக்கிழங்கு :கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கல், குடல் புற்றுநோய், குடல் வலி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.


ஜூலை 04  இன்று

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்


நீதிக்கதை

இரண்டு மரம்!

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. 'மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க

முடியுமா? 'என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.
குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்' என்றது.

அதற்கு மரம் கூறிய பதில்

'எனக்கு தெரியும் நான் வலுவிழந்து  விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன்," மன்னித்து விடு என்றது.


உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள்


இன்றைய செய்திகள் - 04.07. 2023

*"மேதாது அணைக்கட்டும் முயற்சியை நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு அரசு முறியடிக்கும்" என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்.

*சென்னையில் இன்று முதல் மொத்தம் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு.

*கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு.

*இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முன்னேறியதாக வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் 3 நாட்களுக்கு  கன மழைக்கு வாய்ப்பு.

*வங்கதேச கிரிக்கெட் தொடர்-  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு.

*கோவையில் தென்னிந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டி - தமிழ்நாடு முதலிடம்.

Today's Headlines

* Minister Duraimurugan's plan as "The Tamil Nadu government will defeat the Megadatu dam's attempt through the court".

 *Minister Periya Karuppan has announced that tomatoes will be sold in a total of 82 fair price shops in Chennai from today.

 *Due to the increase in the spread of fever in Cuddalore district for the past few days, there has been an increased i number of patients visiting the government hospital.

 *Meteorological Center informs that Southwest Monsoon has advanced across India.  Chance of heavy rain for 3 days in Tamil Nadu.

 * Indian Women's Cricket Team were Announced for Bangladesh Cricket Series

 *Tamilnadu Tops In South Indian Level Basketball Tournament for Disabled in Coimbatore .
 Prepared by

Covai women ICT_போதிமரம்


School Morning Prayer Activities - 03.07.2023

  

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :206

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம்:

துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.

பழமொழி :

A little pot is soon hot

சிறிய பானை சீக்கிரம் சூடாகும்


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்

2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

“ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்” – ரெபேகா வுட்ஸ்டாக

பொது அறிவு :

1. இந்திய தேச தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?


விடை: மகாத்மா காந்தி

2. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?


விடை: இந்திரா காந்தி.


English words & meanings :

 lawn - a grassy ground புல்வெளி; mahout - elephant driver யானைப்பாகன்
ஆரோக்ய வாழ்வு :

கருணைக்கிழங்கு : சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

நீதிக்கதை

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.


தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.


இன்றைய செய்திகள் - 03.07. 2023

*மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார் அஜித் பவார். 

*போர் விமான என்ஜின் தயாரிப்பு- இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது பிரான்ஸ் நாடு.
*மொழி என்பது நம்மைப் பொறுத்தவரை ரத்தமாக உள்ளது- வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை மாநாட்டில் காணொளி மூலம் முதலமைச்சர் பேச்சு.

*சென்னையில் தக்காளியின் விலை ₹ 10 அதிகமாகி ஒரு கிலோ ₹130க்கு விற்பனை. தக்காளியின் விலை உயர்வு காரணமாக நியாய விலை கடையில் விற்க ஆலோசனை.

*யானைகள் நடமாட்டத்தால் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

*தேசிய சாம்பியன்ஷிப் கோப்பையுடன் வந்த தமிழக பெண்கள் கால்பந்து அணிக்கு உற்சாக வரவேற்பு.


Today's Headlines

*Ajit Pawar took charge as Deputy Chief Minister of Maharashtra.

 * France has offered to help India in the production of fighter aircraft engines.

 *Language is blood for us- Chief Minister's video speech at North America Tamil Sangh Council conference.

 *In Chennai, tomato prices increased by ₹ 10 to ₹ 130 per kg.  Advice to sell at fair price shop due to rise in price of tomatoes.

 * Tourists are disappointed because of the ban on the Parijam lake in Kodaikanal due to the movement of elephants.

 *Enthusiastic welcome to the Tamil Nadu women's football team who came with the National Championship trophy.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

எண்ணும் எழுத்தும் வகுப்பு-1,2,3 பாடக்குறிப்பு

எண்ணும் எழுத்தும் Class-1,2,3 அலகு -1
Tamil medium - Click Here 

English medium - click here 

12 அலகு ஒரே தொகுப்பாக Click here



 அலகு -2
Tamil Medium - Click Here 



அலகு -3
Tamil Medium Click here


எண்ணும் எழுத்தும் 4 & 5 ஆம் வகுப்புகளுக்களுக்கான பாடத்திட்டம்

எண்ணும் எழுத்தும் 4 & 5 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம்
images%20(11)


அலகு -1 -T/M -Click here pdf file

அலகு -1-E/M- Click here pdf file






அலகு -2-T/M- Click here pdf file

அலகு -2- E/M- Click here pdf file

அலகு -3- T/M- Click here pdf file




அலகு -3- T/M Click Here pdf file-2

அலகு -3- E/M - Click Here pdf file



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள்

 EE IED THB & WORKBOOK

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல் மற்றும் ஆசிரியர் கையேடு பயன்படுத்துவது குறித்த வழிமுறைகள் -- SPD செயல்முறைகள்



Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு Bonafide Certificate வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!

 

மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு Bonafide Certificate வழங்குதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்!


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 


30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


CEO - DEO - Retirement June 2023 - Incharge Order - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


DSE - GHS HM Mentor Training Proceedings - Download here


Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

 

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!


DSE - GHSS HM Mentor Training - Proceeding - Download here




Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News

School Diary - July 2023

 

2023-2024 கல்வி ஆண்டு 2023 ஜூலை மாதம்

ஆசிரியர் டைரி


01.07.2023- சனிக்கிழமை

BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


03.07.2023- திங்கள் கிழமை


(03.07.2023-30.07.2023)

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி


03.07.2023-08.07.2023 தொல்லியல் பயிற்சி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்


08.07.2023- சனிக்கிழமை

CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி

(1-3வகுப்பு ஆசிரியர்கள்)

&DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


15.07.2023- சனிக்கிழமை

காமராஜர் பிறந்த நாள்

கல்வி வளர்ச்சி நாள்

&

CRC-எண்ணும் எழுத்தும்- தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி*

(4-5 வகுப்பு ஆசிரியர்கள்)

&

CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்


17.07.2023 to 22.07.2023 -திங்கள் முதல் சனி வரை

தொல்லியல் பயிற்சி

(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)


19.07.2023 to 20.07.2023 - புதன் மற்றும் வியாழன் வரை

*சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர்கள்


20.07.2023- வியாழக்கிழமை

இஸ்லாமியர்(ஹிஜிரி) புத்தாண்டு -(RL)


24.07.2023-31.07.2023 திங்கள் முதல் திங்கள் வரை 

ஆங்கில ஒலிப்பு பயிற்சி

ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள்


25.07.2023-27.07.2023

மதிப்பீட்டுப் பயிலரங்கம்

25.07.2023 : 6-8 வகுப்பு ஆங்கில ஆசிரியர்கள்


26.07.2023 : 6-8 வகுப்பு கணக்கு ஆசிரியர்கள்


26.07.2023 : 6-8 வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்கள்


29.07.2023- சனிக்கிழமை

மொகரம்-அரசு விடுமுறை

Click here to join whatsapp group for daily kalvinews update 

Click here for latest Kalvi News