ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.

கோடை விடுமுறையில், மலை சுற்றுலா தலங்களில் சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவது உட்பட, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

* மாதந்தோறும் பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் சந்திப்பு, பள்ளி மேலாண்மை குழுவின் உறுதுணையுடன் நடத்தப்படும்

* இலக்கியம், கவின்கலை, சூழலியல் சார்ந்த மன்றங்கள், பள்ளிகளில் புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த வழிவகை செய்யப்படும்

* விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என, மாணவர்களின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்

* கலைத் திருவிழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படும். இவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்

* மாணவர்களின் தனித் திறமைகளை மெருகேற்ற, மலை சுற்றுலா தலங்களில், கோடை கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். சூழலியல், தலைமைத்துவம், மனித உரிமை, சமூக நீதி, பெண்ணியம் மற்றும் எதிர்காலவியல் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்

* வரும் கல்வியாண்டின் முதல் வாரத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, மன நலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

* செயல்வழிக் கற்றலை ஊக்குவிக்க, பள்ளிதோறும் காய்கறி தோட்டங்கள் ஏற்படுத்தப்படும். அவற்றில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், சத்துணவில் பயன்படுத்தப்படும்

* மாநில சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாட, ஏற்பாடுகள் செய்யப்படும்

* அறிவியல் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 'ஸ்டெம்' எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த, புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

* தேவைப்படும் மாணவர்களுக்கு, மனநல ஆலோசனை வழங்கப்படும்

* மாணவர்களின் நல்லியல்புகளை மேம்படுத்தவும், நற்பண்புகளை உருவாக்கவும், பெற்றோரும், பள்ளியும், அரசும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய இணைப்பை உறுதிப்படுத்த, தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

முன்கூட்டியே கோடை விடுமுறை - அறிவிப்பு விரைவில் வெளியாகும் . அமைச்சர் அன்பில் மகேஷ்

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். கோடை வெயில் அதிகமாக இருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காமல் இருந்ததே மாணவர்களிடையே மோதல்கள் ஏற்படக்காரணம் எனவும் அமைச்சர் பேட்டி அளித்தார்.




பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

பொதுத் தேர்வு எழுத உள்ள 10,11,12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு நாட்களில் தெரிந்து கொள்ள வேண்டியவை!

IMG_20220502_221439

'பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த 1,300 கோடி' - அமைச்சர் அன்பில் மகேஷ்

வரும் கல்வியாண்டில் பள்ளிகளின் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


சிவகங்கை மாவட்டம், கண்டர மாணிக்கத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பள்ளி கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும், அதனால், சில விருப்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், அதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசு திவீர முயற்சி எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.


மேலும், மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் மாநில கல்வி துறை ஒரு சிறந்த மாற்றம் பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு..!!

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. 




மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? - RTI Reply Letter.

பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ .65,500 / - எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா ? இல்லையா ? என்ற விவரம் வழங்கவும்




TNEMIS இனிமேல் TNSED- பெயர் மாற்றம் SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


TN EMIS SCHOOL APP NEW UPDATE Version 0.0.23


UPDATED ON 01 MAY  2022


RTE Attendance Added & BMI Bug Fixed.


TN EMIS SCHOOL APP


New Updated Link.











9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!

9 வட மாவட்டங்களுக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 3000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வெளியீடு!!!


Additional 3000 posts- pay authorization letter.pdf 

'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022

 'சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது' - MADRAS HIGH COURT JUDGEMENT COPY-DATE-21.04.2022


6th, 7th, 8th -Std 3rd Term Science Model Question Paper (TM) | அறிவியல் மாதிரி வினாத்தாள்

 



6 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் - Click here to download 

 7 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் - Click here to download
 
 8 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி வினாத்தாள் - Click here to download

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் எரிசக்தி ஆற்றல் குழுக்கள் (Energy Clubs) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் எரிசக்தி ஆற்றல் குழுக்கள் (Energy Clubs) நிறுவுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!!






1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என செய்தி வெளியான நிலையில், பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்தது. 1 -9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி மே 6-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.




10,11,12th Public Exam Hall Supervisor Guide - May 2022

 10,11&12 வகுப்பு தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கான கையேடு.


10,11,12th Public Exam Hall Supervisor Guide - May 2022 - Download here

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை கணக்கு மாதிரி வினாத் தாள்- pdf

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை கணக்கு மாதிரி வினாத் தாள்- pdf

அடிப்படை விதி 56(1)ன் படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு விளக்கம்!!!

அடிப்படை விதி 56(1)ன் படி ஓய்வு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு விளக்கம்!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 முதல் ஜூன் 20ம் தேதி வரை 48 நாட்கள் கோடை விடுமுறை அறிவிப்பு

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் Baseline survey மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும்

தன்னார்வலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு :

உங்கள் மையத்தில் பயிலக் கூடிய குழந்தைகளுக்கு பேஸ்லைன் சர்வே(Baseline survey) ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பேஸ்லைன் சர்வே(Baseline survey) மேற்கொள்ளும்போது ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்களும் அதற்குரிய தீர்வுகளும் நமது இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலரால் கீழே உள்ள PDF file-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

Baseline survey FAQ - Download here...

மேற்கண்ட file-ஐ download செய்து Baseline survey-வை சிறப்பாக முடிக்கவும்.


ஊக்க ஊதிய உயர்வு - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

ஊக்க ஊதிய உயர்வு - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து 

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்

பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்





பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள்


 பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) உத்தரவு!!!*

 

8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை!!!

8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை!!!


Click here to download pay order pdf 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பொத்தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எந்த பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும். எனவே தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும் கூறியுள்ளது.

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் வருகிற மே மாதத்தில் நடைபெற உள்ளது. 2021- 2022ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வுகளுக்கான செயல்முறை தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வுகளை சுமார் 30 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த கல்வியாண்டுக்கான  பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா காலத்தில் குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைத்து பாடங்களில் இருந்துகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்த ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான வினாக்கள் 2021- 2022ம் ஆண்டிற்கான மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படுகிறது. இதன் பாடத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுத்தேர்வை எதிர்நோக்கும் மாணவர்கள் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி அனைத்து பாடங்களையும் படித்து தெரிந்து இருக்க வேண்டும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள் நல்வழிகாட்டுவார்கள். பிள்ளைகளின் கவனம் படிப்பில் இருக்கும்படியாக அவர்களின் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கே.வி., பள்ளி மாணவர் சேர்க்கை; புதிய வழிகாட்டுதல் வெளியீடு

நாடு முழுதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீட்டை ரத்து செய்த மத்திய அரசு, மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுதும் உள்ள, 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நிர்வகித்து வருகிறது.

இதில், 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களுக்கு ஆண்டுதோறும் தலா 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தன. நேரடி வாரிசுகள்இதன் அடிப்படையில் லோக்சபாவை சேர்ந்த 543 எம்.பி.,க்கள், ராஜ்யசபாவை சேர்ந்த 245 எம்.பி.,க்கள் பரிந்துரைக்கும் 7,880 மாணவ - மாணவியருக்கு இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும், 'சீட்' வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது.மத்திய அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை ஊழியர்களின் குழந்தைகள், எம்.பி.,க்களின் நேரடி வாரிசுகள் மற்றும் பேரக்குழந்தைகள், கே.வி., பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் பேரக்குழந்தைகள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ஓதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை கே.வி., பள்ளிகளுக்கான அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன் விபரம்:கொரோனா தொற்று பாதிப்பினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, பி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு அளிக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள் அளிக்கும் பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த பரிந்துரையின் கீழ், ஒவ்வொரு கே.வி., பள்ளியிலும் 10 மாணவர் வரை சேர்த்துக் கொள்ளப்படுவர். 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு ஜூன் மாதம் வரை வழங்கப்படும்.பரம் வீர் சக்கரா, மகா வீர் சக்கரா, வீர் சக்கரா, அசோக் சக்கரா, கீர்த்தி சக்கரா, ஷவுரிய சக்கரா உள்ளிட்ட வீர தீர செயல்களுக்கான விருது பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.ஒதுக்கீடு தொடரும்'ரா' எனப்படும் உளவு அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் குழந்தைகள் 15 பேருக்கு வழங்கப்பட்டு வந்த ஒதுக்கீடு தொடரும்.

அதே போல, பணியின் போது இறந்த மத்திய அரசு ஊழியர்களின் பிள்ளைகள், மற்றும் நுண் கலைகளில் சிறப்பு திறமை உள்ள பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு தொடரும்.வெளிநாடுகளில் இருந்து பணியிட மாறுதல் பெற்று வருபவர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 60 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கான மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


All district unit transfer list



All district unit transfer list


Click here to download



Mutual Transfer 2022 - List!



 

Mutual Transfer 2022 - List!



Click here to download


சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்-pdf




 அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல்




தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 & சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 28





இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE - 0.28 Version Available 

P.G Teachers - All Regularization Order Details Single File

முதுகலை ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை அரசாணைகள் மற்றும் உத்தரவுகள் ஒரே கோப்பில் உள்ளது.



பொதுத்தேர்வு எழுதும் போது மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் - தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதி வருகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். 




இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்தது. 

இந்த நிலையில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கணினியில் வைரஸ் தாக்குதலை தடுக்க Anti Virus Software Install செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 கணினியில் வைரஸ் தாக்குதலை தடுக்க Anti Virus Software Install செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!





10-ம் வகுப்பு மெல்ல கற்போருக்கான வினா - விடை வங்கி தொகுப்பு- ALL SUBJECTS

10-ம் வகுப்பு  மெல்ல கற்போருக்கான வினா - விடை வங்கி தொகுப்பு- ALL SUBJECTS