புதிதாக உருவாக்கப்பட்டுள்ள TN EMIS SCHOOL APP செயலியை கையாளுதல் சார்ந்து நாகை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நாகப்பட்டினம் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் பிறப்பிப்பவர்:- திரு. க.மதிவாணன், எம்.எஸ்ஸி., எம்.எட், எம்.பில், ந.க.எண்.:21/De-3/EMIS-Attendance/Ss/2022 நாள் 07.01.2022

பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, நாகப்பட்டினம் மாவட்டம் EMIS இணைய தளத்தில் ஆசிரியர், மாணவர், Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS School App புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை கையாளுதல் - தொடர்பாக. 


பார்வை: State EMIS Team - இணைய வழி கூட்டம் குறிப்புகள் நாள்:06.01.2022 

பார்வையில் காணும் இணையவழி கூட்ட குறிப்பின்படி அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் தங்களது android mobile-ல் TN EMIS School app என்ற செயலியினை play store-ல் சென்று பயன்படுத்தியும்) பதிவிறக்கம் செய்து கொள்ளவும். Attendance App Link: https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis பின்னர் தங்களது பள்ளிக்கான user ID மற்றும் password கொடுத்து செயலியை open செய்யவும். பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:- > 


Today Status என்பதை touch செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும். - இதில் உள்நுழைந்து fully working என்பதை click செய்தால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும். இந்த option-ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும், 


> Fully not working என்பதை தேர்வு செய்தால் உரிய காரணத்தை வழங்க வேண்டும். இதில் ஆசிரியர்கள் வருகையை மட்டும் பதிவு செய்ய இயலும், மாணவர்களுக்கு வருகையை பதிவு செய்ய இயலாது. 


> Partially working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்தல் இயலும், எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும். மேலும், அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும். மேலே குறிப்பிட்ட Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகை மற்றும் local body வருகையை பதிவு செய்ய இயலும். 


                                                                         2 


* Staff attendance வருகையை பதிவு செய்ய click செய்யும் போது automatic sync settings open ஆகும். அதில் School information, Todays status, Staff List, Students list அனைத்தும் Sync குறியுடன் இருக்கும். இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒருமுறை touch செய்து Sync செய்து கொள்ள வேண்டும். 


* School information sync செய்த பின் todays status sync செய்யும் போது “Information" box display வந்தால் மீண்டும் home page (முதல் பக்கத்தில்) உள்ள todays status-ல் save செய்த பின்புதான் பள்ளி விவரங்கள் sync ஆகும். 


* அடுத்து staff list sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகிவரும்.


 * பின்பு students list sync செய்தல் வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர் Today Status-ல் partially working என பதிவு செய்திருந்தால் எந்தெந்த வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை select செய்து Sync செய்தல் வேண்டும். உதாரணமாக ஒரு உயர்நிலைப் பள்ளியானது அன்றைய தினத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டிருந்தால் 10-ஆம் வகுப்பு மற்றும் அதன் sections-யும் select செய்து sync கொடுத்தல் வேண்டும். தற்போது மாணவர்கள் விவரமும் sync செய்யப்பட்டிருக்கும். 


1. Teachers Attendance - School Login 

3. வட்டாரக் கல்வி அலுவலர்கள், அனைத்து ஒன்றியங்கள் - நாகப்பட்டினம் மாவட்டம் - தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. 


4, அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் வழியாக 


5. அனைத்து வகை தொடக்க/நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் வழியாக 


6. வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் - நாகப்பட்டினம் மவட்டம் 


நகல்: 1. மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை- தவலுக்காக அன்புடன் அனுப்பலாகிறது.



ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App-ல் School login-ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும். Teachers List, Students List Stored Locally என வரும். Sync settings-ல் அனைத்தும் முடித்த பின்பு Home page-ல் staff attendance click செய்து open செய்தால் sync ஆன அனைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் display ஆகும். இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P-Present எனவும், இன்றைய நாளில் அவருக்கு work attokment இல்லை எனில் ஒருமுறை touch செய்து N/A எனவும், மற்றொரு முறை touch செய்து OD, TR - Training, DE-Deputation, A-Absent (CL, ML, Half day CL, EL, RH, LOP, UEL, Part time, Maternity Leave, Study Leave, Special Leave, Un Authorise, N/A - No duty (in common reason)) என Teaching Staff, Non Teaching, Basic Staff (Lab Asst, Clerk) இவ்வாறாக வருகையை பள்ளி login-ல் பதிவு செய்தல் வேண்டும். 


..3... 


2. Students Attendance - Teacher individual login மாணவர்கள் வருகையை TN EMIS School App-ல் Teacher login-ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும். வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App-ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID , Password கொடுத்து open செய்யவும். Student Attendance class teacher login-ல் open செய்து student list sync செய்தல் வேண்டும். பின்பு student attendance click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். 


3. Local body attendance - School login 


பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scavengers-ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும். குறிப்பு:- Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் network கிடைக்கும் நேரங்களில் open செய்து பச்சை கலர் மாறும் வண்ணம் save செய்தல் வேண்டும். கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நாகப்பட்டினம், 


பெறுதல்: 


1. முதன்மைக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம் தவலுக்காக அன்புடன் அனுப்பலாகிறது. 


2. மாவட்டக் கல்வி அலுவலர்கள், நாகப்பட்டினம் மவட்டம் - தகவலுக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. 









2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல், பதவி உயர்வு, மற்றும் பணி நிரவல் EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மேற்கொள்ளுதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல், பதவி உயர்வு, மற்றும் பணி நிரவல் EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மேற்கொள்ளுதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.




Click here to download proceedings

EMIS மூலம் Online Transfer Application Fillup 2022

EMIS மூலம் Online transfer application fillup 2022


 Click here >>> EMIS மூலம் Online Transfer Application Fillup 2022

ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை

(Approval of Headmasters for Teachers' Transfer Applications)...

Teachers' Transfer Counselling 2022 -  ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பத்தை EMIS Portal-லில் submit செய்த பின் தலைமை ஆசிரியர் தங்களுடைய User ID யைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் விண்ணப்பத்தை Approve செய்ய வேண்டும்.


1. Log In >> Transfer Application Approval








ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : EMIS-ல் விண்ணப்பித்தல் & வன்நகல் எடுக்கும் வழிமுறை

பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறைக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை  Browser மூலமாக EMIS வலைதளத்திற்குச் சென்றே விண்ணப்பிக்க வேண்டும். EMIS APP-னைப் பயன்படுத்தக் கூடாது.

முதலில் ஆசிரியரின் EMIS ID & கடவுச் சொல்லைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வழியே பதிவேற்றப்படும் விண்ணப்பம் இறுதியாக SUBMIT கொடுப்பதோடே முடிந்துவிடும்.

இதன் தொடர்ச்சியாக, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் பள்ளியின் EMIS ID (UDISE CODE) & கடவுச் சொல்லைக் கொடுத்து EMIS வலைதளத்திற்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து Approval கொடுத்த பின்னரே Print எடுக்க இயலும்.


 Print எடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பள்ளிக் கல்வி / தொடக்கக் கல்வித் துறை சார்ந்த உடனடி உயர் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை இருப்பின் தலைமையாசிரியர் அதனை Reject செய்யலாம். அதன்பின் சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிழையின்றி மீண்டும் Online-ல் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.


மாறுதல் கோரும் வகையில், *'ஒன்றியத்திற்குள் + மாவட்டத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு'* என்ற வசதியும் *'ஒன்றியத்திற்குள் + பிற மாவட்டத்திற்கு'* என்ற வசதியும் விடுபட்டுள்ளது. இது முன்னர் வழக்கத்தில் இருந்த நடைமுறையே. இது குறித்து மாநில EMIS குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இவ்வசதியும் சேர்க்கப்படலாம்.


பணிவரன்முறை தேதி, பள்ளியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து மாநில EMIS குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.


 பள்ளித் தலைமையாசிரியர்கள் தமக்கான மாறுதல் விண்ணப்பத்தை அளித்தல் தொடர்பான சிக்கலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்படும்.

 தற்போது சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் சற்றே தாமதித்து விண்ணப்பிப்பதே நல்லது.


 பள்ளித் தலைமையாசிரியர்கள் எப்பொழுது APPROVAL கொடுக்கலாம் என்பது குறித்து சார்ந்த துறை அலுவலகம் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். அதுவரை பொறுமை காக்கவும்.

ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து ஆணையரின் செயல்முறைகள்

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.


 மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை ( EMIS Online ) யில் பதிவேற்றம் எவ்வாறு செய்வது என்பது குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் பதிவு செய்யும் ( Model ) வழிமுறையினை பின்பற்றி செயல்படுமாறும் மேலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி அனைத்து மாவட்ட முதன்மைக் செயல்படவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


ஆசிரியருக்கான மாறுதல் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் முறை ( பள்ளிக்கல்வி ) 


1) ஒவ்வொரு ஆசிரியரும் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட Individual Login ID ஐ பயன்படுத்தி மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடல் வேண்டும் . அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டவுடன் (இணைக்கப்பட்டுள்ள மாதிரி படிவங்களின் அடிப்படையில் ) submit செய்திடல் வேண்டும்.

 

2) அதன் தொடர்ச்சியாக சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி . Login ID ஐ பயன்படுத்தி மேற்படி மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை View செய்து சரியாக அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என் உறுதி (பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டுதல்) செய்தபின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் Approval செய்யப்படவேண்டும் . 

 

3) மேற்படி பள்ளித் தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு விண்ணப்பித்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பத்தினை Approval செய்யப்பட்ட பின்னர் அதனை மூன்று நகல்கள் எடுத்து ஒன்றினை சார்ந்த ஆசிரியருக்கு சார்பு செய்துவிட்டு மற்றொரு பிரதியினை சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்திடல் வேண்டும் .


Teachers Transfer Application Upload EMIS Website - Proceedings - Download here

TN EMIS - பள்ளி தகவல் அடங்கிய ஆசிரியர் , மாணவர் வருகை பதிவு செய்ய புதிய செயலி வெளியீடு.- NEW MOBILE APPLICATION- LINK


TN EMIS - பள்ளி தகவல் அடங்கிய ஆசிரியர் , மாணவர் வருகை பதிவு செய்ய புதிய செயலி வெளியீடு.


DOWNLOAD THE TN-EMIS APP IN BELOW LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇











Teachers Transfer Counselling 2022 - Application Forms, Norms GO , Schedule Published | ஆசிரியர்கள் இடமாற்ற ஆலோசனை 2022 - விண்ணப்பபடிவங்கள், விதிமுறைகள் GO , அட்டவணை வெளியிடப்பட்டது

அரசு / ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / தொடக்க நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் மூலம் இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படவுள்ளதால் , ஆசிரியர்களின் பொது மாறுதல் தொடர்பான அரசாணை , கலந்தாய்வு அட்டவணை மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பம் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது . மேலும் மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் வழங்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளைப் பின்பற்றி ஆசிரியர்களிடமிருந்து மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




 இணைப்புகள்:

1. அரசாணை எண் 176 , பள்ளிக் கல்வி ( பக 5 ( 1 ) துறை நாள் 17.12.2021 

2. கலந்தாய்வு அட்டவணை 

3. மாறுதல் கோரும் விண்ணப்பங்கள்


Download - Teachers Transfer Counselling 2022 - Application Forms,  Norms GO ,Schedule 

KALVI TV CUE- SHEET- JANUARY 03.01.2022 TO- 31.01.2022 - 4 WEEKS

KALVI TV CUE- SHEET- JANUARY  03.01.2022 TO- 31.01.2022 - 4 WEEKS

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇







12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  


கொரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், அன்றாட தொழில்களும் பாதிப்புக்குள்ளான நிலையில், மாணவர்களின் கல்வியும் பெரிதளவில் பாத்திற்கு உள்ளாகியுள்ளது.  இந்த பெருந்தொற்று பல மடங்கு பெருகி வருவதால், மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. 

பின்னர் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு, அரசு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த தொடங்கியது.  இருப்பினும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.  தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல ஆரம்பித்தனர்.


கல்வியாண்டில் இடையில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று பரவலாக கேள்வி எழுந்தது, இதற்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்தப்படும் என்று கூறினார்.  இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் மீண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று குழப்பம் எழுந்ததையடுத்து, நேற்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத்தேர்வு நடத்துவதில் மாற்றம் இல்லை நிச்சயமாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.


இதனையடுத்து  12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை நாளை முதல் 20-ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்துமாறு அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு ரூ 225 கட்டணம் செலுத்துமாறும், செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு ரூ 175 கட்டணம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DISTRICT WISE- BT VACANT LIST- & ABSTRACT ( ALL SUBJECTS)-PDF

DISTRICT WISE-  BT VACANT LIST- ( ALL SUBJECTS)
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇





EMIS மூலம் Transfer Counseling Apply செய்வது எப்படி?

 EMIS மூலம் Transfer counseling apply செய்வது எப்படி? என்று ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாறுதல் கலந்தாய்வில் கூறப்பட்ட தகவல் மூலமாக இவ்வாறு தவறுதலாக ஆசிரியர்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.தொடக்கக் கல்வி துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி(copy) மட்டும் 07.01.2022க்குள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.


 அலுவலகத்தில் EMIS  Web Portal (https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard )- இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள். கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.


பள்ளிக் கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்று மாறுதல் பெற விரும்புவோர் மாறுதல் விண்ணப்பம் ஒரு படி (copy) மட்டும் 07.01.2022க்குள் தலைமையாசிரியர் வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் அளித்தால் போதுமானது.

அலுவலகத்தில் EMIS  Web Portal (https://emis.tnschools.gov.in/login?returnUrl=%2Fdashboard ) – இல் பதிவு செய்து 4 படிவங்கள் Download செய்து விண்ணப்பம் அளித்தவர்களிடம் கையொப்பம் பெற்று, ஒரு copy அளிப்பார்கள். கலந்தாய்வின்போது நமக்குக் கொடுக்கப்பட்ட Copy- யினை கையில் எடுத்துச் செல்லவேண்டும்.

பொங்கல் போனஸ் அரசாணை வெளியீடு.




GO NO : 1 , DATE : 01.01.2022 - Download here...




2020-21 - ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் - ஒப்பளிப்பு- ஆணை வெளியிடப்படுகிறது.


ஆணை : 

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து " C மற்றும் “ D பிரிவு அரசுப் பணியாளர்கள் , உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள் , அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் , ரூ .3,000 / - என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2020-2021 - ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ .1,000 / - பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.



அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.

ஜனவரி முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு வழங்க உள்ள அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.

ORDER : In the Government Order first read above , orders were issued sanctioning revised rate of Dearness Allowance to State Government employees as detailed below :





GO NO : 3 , Date : 01.01.2022 - Download here




அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2021

எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம்.



புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 திட்டத்தின்படி, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் எனவும் தமிழக அரசின் நிதித்துறை கொள்கை விளக்க குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021 பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டங்களின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் ஐந்து லட்ச ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கு ரூபாய் 300 பெறப்படுகிறது. இதன் மூலம் எதிர்பாராத செலவுகளுக்காக நிதி மூலதனம் மூலம் ரூபாய் 20 லட்சம் வரை மருத்துவ உதவியைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து, இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2018

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2014, 1.7.2014 முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு கால அளவிற்கு சில சிறப்பம்சங்களுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் பெற உச்ச வரம்பு 2 லட்சம் ரூபாயிலிருந்து, 4லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஓய்வூதியதாரர்களை சார்ந்துள்ள மகன் அல்லது திருமணமாகாத மகள் ஆகியோர் மனநலம் குன்றிய அல்லது மனநலமற்றவர்களாக இருப்பவர்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் பெற உச்சவரம்பு 7.50 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டம்: பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பெரும்பாலான தனியார் பள்ளிகள் உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. பெயரளவுக்கு பாடங்களை நடத்திவிட்டு மாணவர்களை பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தயார் செய்வதிலேயே தீவிரம் காட்டுகின்றன. ஆனால், உயர்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்தே அதிக கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக மாணவர்கள் தேசிய நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியாத சூழல் நிலவுகிறது.




இதுதவிர தனியார் பள்ளிகள் இடையே நிலவும் போட்டி மனப்பான்மை மாணவர்கள், பெற்றோர்களுக்கு கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இவற்றைக் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017-18-ம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்தத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆக குறைத்து, ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படியே உயர்கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இதற்கிடையே, பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது. மதிப்பெண் சான்றிதழ் தனியாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை 2018-ம் ஆண்டு அறிவித்தது. தனியார் பள்ளிகளின் நிர்பந்தத்தால் இந்த முடிவை மேற்கொண்டதாக தமிழக அரசின் மீது அப்போதே பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தற்போது 10, 12-ம் வகுப்புகளைப் போல பிளஸ் 1-க்கும் 2018-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைமுறை அமலில் உள்ளது. கரோனா பரவலால் 2020-21-ம் கல்வியாண்டில் மட்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

10, 11, 12-ம் வகுப்பு என தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. இதுதவிர நீட், ஜேஇஇ உ்ளளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகவும் போதுமான அவகாசம் கிடைப்பதில்லை.

தமிழகம் தவிர்த்து, சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை இல்லை. இதனால் பல்வேறு காரணங்களால் பள்ளிகள் மாறும்போது மாணவர் சேர்க்கையிலும் குழப்பங்கள் நிலவுகின்றன.

இவற்றைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வை ரத்து செய்தாலும் தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தை தவிர்க்க மாவட்ட அளவிலான தேர்வை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பரிந்துரை அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்தபின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க காலநீட்டிப்பு | 9th class students Rural Performance Examination - Application date Extension

ஊரக திறனாய்வு தேர்வுக்கு 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு எழுத ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத தகுதி உடையவர் ஆவர். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் கடந்த டிசம்பர் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, சென்னையை நீங்கலாக அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊரகத் திறனாய்வு தேர்வு 30ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பல பள்ளிகளிலிருந்து தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை என்று தகவல் பெறப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்களின் நலன் கருதி விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து வழங்குதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்த விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.


 விண்ணப்பிக்க கால அவகாச நீட்டிப்பினைத் தொடர்ந்து வரும் 30ம் தேதி நடக்க இருந்த ஊரகத் திறனாய்வு தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 20ம் தேதி நடக்கும்.


இந்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கும், தற்போது விண்ணப்பிக்க உள்ள மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

 எனவே தகுதி வாய்ந்த தேர்வர்களின் விண்ணப்பங்களை வரவேற்று, ஆய்வு செய்து பதிவேற்றம் செய்ய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பங்களை வரும் 12ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி மையங்கள்* _கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் வெளியீடு.


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள் :

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படும் பொழுது கோவிட்-19 நோய்ப் பரவல் தடுப்பிற்காக கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும். 




1) மையங்களுக்கு வரும் குழந்தைகள், தன்னார்வலர்கள், பெற்றோர் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். 

2) மையங்களில் குழந்தைகள் அமர்வதற்கு தவறாமல் சமூக இடைவெளி வட்டங்கள் வரைந்து இருக்கவேண்டும். 

3) குழந்தைகள் மையங்களுக்கு வரும்பொழுது கைகளை முழுவதும் சுத்தம் செய்துகொள்ள சோப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். இவற்றில் கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகு குழந்தைகள் மையங்களுக்கு வர ஏற்பாடு செய்தல் வேண்டும்.

4) கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி ( Hand sanitizer) பயன்படுத்தலாம்.

5) குழந்தைகள் வகுப்பில் நெருக்கமாக அமர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பாடல் மற்றும் செயல்வழிக்கற்றல் நடைபெறும் பொழுது கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். 

6) இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிடும் அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் முழுமையான முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

7) தன்னார்வலர்கள் எப்பொழுதும் முகக்கவசம் அணிந்து வகுப்புகள் நடத்த வேண்டும்.

8) குழந்தைகளை கையாள வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருத்தல் வேண்டும். 

9) குழந்தைக்கு ஏதேனும் சளி அல்லது காய்ச்சல் தென்பட்டால் உடனடியாக மருத்துவ துறையின் உதவியை பெற்றோர்கள் நாடுவதற்கு தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்தல் வேண்டும். 

10) இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு தேவைப்படும் கிருமி நாசினி மற்றும் சோப்பு ஆகியவற்றை நன்கொடையாகப் பெறுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உதவியை கல்வித்துறை அலுவலர்கள் பெறலாம்.

11) இல்லம் தேடி கல்வி மையம் செயல்படும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவ்விடங்களை அவ்வபோது கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.

12) தன்னார்வலர்கள் வீட்டில் யாருக்கும் சளி, காய்ச்சல் போன்ற நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டால் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருதல் கூடாது. மருத்துவத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

15 - 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி: 7 முக்கிய கேள்வி, பதில்கள்

இந்தியாவில் திங்கள்கிழமை முதல் சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. ''குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்சமயம் புள்ளிவிபரங்கள் அதிகம் இல்லாததால், முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' எனக் கேள்வி ஒன்றுக்கு பிரபல வைரலாஜி நிபுணர் ககன் தீப் காங் பதில் அளித்துள்ளார்.



இந்தியாவில் 15 முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமிகளுக்கு நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் எனப்படும் கொரோனா வைரஸ் திரிபு கண்டறியப்பட்டது.
இந்தியாவிலும் ஒமிக்ரான் தாக்கம் படிப்படியாக உயர்ந்து கொண்டிருப்பதால், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, ` ஜனவரி 3 ஆம் தேதி முதல் சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது' என்றார். மேலும், ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் உள்ள அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான பதிவு தொடங்கியுள்ளது.

தடுப்பூசி ஏற்படுத்திய விவாதம்

அதேநேரம், குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் முடிவை அறிவியல்பூர்வமற்றதாக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய் தெரிவித்திருந்தார். இவர் கோவேக்சின் தடுப்பூசி சோதனைகளில் பிரதான அங்கம் வகித்தவர். `குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய நாடுகளின் தரவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்' எனவும் சஞ்சய் கே ராய் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, கொரோனா நோய்த் தொற்றின் தீவிரமானது குழந்தைகளிடையே மிகக் குறைவாக உள்ளதாகவும் பத்து லட்சம் மக்கள் தொகைக்கு இரண்டு இறப்புகள் மட்டும் பதிவானதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட் விவாதப் பொருளாக மாறியதால், தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா, சில விளக்கங்களை அளித்தார். ` கொரோனா காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்தான். அரசின் இந்த முடிவின் மூலம் சிறுவர், சிறுமிகளைப் பாதுகாக்க முடியும். இவர்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன்மூலம் அவர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கும் பரவும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நன்மையே அதிகம்' என்றார்.
 சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி, ` கொரோனா தொற்றின் பல்வேறு திரிபுகளை நாம் பார்த்தாலும் தொற்று குறையவில்லை. அனைத்து மட்டத்திலும் நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனை குழந்தைகள் நல அகாடமியான ஐஏபி அமைப்பும் பரிந்துரைத்துள்ளது. குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதுகாப்பது என்பதற்கான தரவுகள் வந்துள்ளன' என்றார்.
7 கேள்விகள், மருத்துவர் ககன்தீப் காங் சொல்வது என்ன?

இந்நிலையில், சிறுவர், சிறுமிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசின் கொரோனா பணிக்கு உறுப்பினரும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் வைரலாஜி துறையின் இயக்குநருமான மருத்துவர் ககன்தீப் காங்கிடம், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த கல்பாக்கம் வீ.புகழேந்தி சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இதற்கு மருத்துவர் ககன்தீப் காங் பதிலளித்துள்ளார். அவை இங்கே.

கேள்வி: தற்போதுள்ள சூழலில் 15-18 வயது குழந்தைகளுக்கு அதாவது நலமாக உள்ள (Healthy children) குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அறிவியல் ரீதியாக சரியாக இருக்குமா?
பதில்: ''தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என்பதால், எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் பள்ளிகள் அதை வலியுறுத்தக்கூடும். நலமாக உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையா என்பது குறித்து தற்சமயம் புள்ளிவிவரங்கள் அதிகம் இல்லாததால், அதுகுறித்து முறையான அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தற்போதுள்ள திறன் குறைந்த (Sub-optimal) தடுப்பூசிகளை பயன்படுத்துவதைக் காட்டிலும், ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்".

கேள்வி: இந்தியாவில் 15-18 வயதுள்ள குழந்தைகள் எத்தனை பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு இணை நோய்கள் இருந்தன என்பன போன்ற விவரங்கள் பொதுவெளியில் உள்ளதா?
பதில்: ''நான் இதுகுறித்த புள்ளிவிவரங்களை அரசிடம் கேட்டும் 15-18 வயதுக்கு இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தைகளின் இறப்பு குறித்து மட்டும் தெரியப்படுத்தியுள்ளனர். அது மிகக்குறைவே. இருப்பினும் அந்தக் குழந்தைகளுக்கு இணைநோய்கள் உள்ளதா என்ற முக்கிய புள்ளிவிவரத்தை அரசு வெளியிடவில்லை".

கேள்வி: முதலில் கொடுக்கப்படும் தடுப்பூசிகள் பின்னர் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிப்பதால், Original antigenic sin எனும் பிரச்னை (இதன் காரணமாக உடலில் பின்னர் பாதிப்புகள் ஏற்படும்) கோவேக்சினில் ஏற்பட வாய்ப்புள்ளதா?
பதில்: ``வாய்ப்புள்ளது (Feasible). அது முறையாக ஆராயப்பட வேண்டும்''.

கேள்வி: கோவேக்சின் செலுத்தும்போது நிகழ வாய்ப்புள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முறையான தரவுகள் உள்ளதா?
பதில்: `` அரசு அத்தகைய பாதுகாப்பு (Safety data) குறித்தான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படும் என உத்தரவாதம் அளித்தாலும், கடந்த 11 மாதங்களில் அதுமுறையாக சேகரிக்கப்படவில்லை என்றே எனக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால தடுப்பூசி பாதுகாப்பு குறித்தான புள்ளிவிவரங்கள் தேவை''.

கேள்வி: தற்போது ஒமிக்ரான் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி, பிரதான காரணியாக இருப்பதால் (Dominant strain) அது தடுப்பூசிகளுக்கு சரியாக கட்டுப்படுவதில்லை என்பதால் கோவேக்சின் எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் போக வாய்ப்புள்ளதா?
பதில்:
``பொதுவாக மரபணு பிறழ்வு காரணமாக ஒமிக்ரான் தொற்று தடுப்பூசிகளுக்கு சரியாக கட்டுப்படுவதில்லை. கோவேக்சினுக்கும் அதே நிலைதான். ஆக, அதுகுறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தடுப்பூசிகளின் திறன் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் குறைவதால், தடுப்பூசிகள் மேற்கொண்டு தேவையா என ஆராயப்பட வேண்டும்".


கேள்வி: தடுப்பூசிகளின் பயன்பாடு வைரஸில் மரபணு பிறழ்வை ஏற்படுத்துமா?
பதில்: ''இல்லை. ஆனால், நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் மரபணு பிறழ்வடைய வாய்ப்புள்ளதால், நோய் எதிர்ப்புத்திறன் குறைந்தவர்களை வகைப்படுத்தி, அவர்களுக்கு தடுப்பூசி கொடுக்கும்போது, அவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்து மாற்றம் நிகழ்கிறதா என்பது ஆராயப்பட வேண்டும்".

கேள்வி: தடுப்பூசியின் சாதக, பாதகங்களை கணக்கில் கொண்டால் கோவேக்சினில் பாதகம் அதிகம் உள்ளதாக மருத்துவர் சஞ்சய்ராய் (Epidemiologist-AIIMS-கோவேக்சின் ஆய்வில் ஈடுபட்டவர்) சொல்வது குறித்து உங்களின் கருத்து என்ன?
பதில்: தடுப்பூசிகள் காரணமாக தீவிர பின்விளைவுகள் நிகழ்ந்தாலும், உயிரிழப்புகள் மிகக் குறைவு என்பதால் சாதகங்கள் அதிகமாகவே இருக்கக்கூடும்.

- இவ்வாறு மருத்துவர் ககன்தீப் காங் பதில் அளித்துள்ளார்.

DEE- MUTUAL APPLICATION -PDF

DEE- MUTUAL APPLICATION -PDF

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


School Team visit - தயார் நிலையில் வைக்க வேண்டியவைகள் & ஆய்வு சரிபார்ப்பு படிவம் - check list

School Team visit - தயார் நிலையில் வைக்க வேண்டியவைகள் & 

ஆய்வு சரிபார்ப்பு படிவம் - check list







பள்ளிகள் செயல்பாடு குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

பள்ளிகள் செயல்பாடு குறித்து  மாவட்ட  முதன்மைக்கல்வி  அலுவலர்  அவர்களின்  செயல்முறைகள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇





15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்-சிறுமிகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி...!

இந்தியாவில் நாளை முதல் 15-18 வயது சிறுவர்-சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது
இந்தியாவில் நாளை முதல் 15-18 வயது சிறுவர்-சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது. இதற்கான பதிவு தொடங்கி உள்ளது.



இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டது. பல கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட தடுப்பூசி திட்டத்தில் தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் பரவத்தொடங்கியது.

இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இதையடுத்து இதுவரை தடுப்பூசி திட்டத்தின்கீழ் வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும், இதேபோன்று மற்ற பெரியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று திடீரென டி.வி.யில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர், “கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்க உள்ளது.

இதேபோல் ஜனவரி 10-ந்தேதி முதல் முன் எச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) செலுத்தும் பணி தொடங்கும். முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி (முன் எச்சரிக்கை தடுப்பூசி) செலுத்தப்படும்” என அறிவித்தார்.

இதன்படி நாளை (3-ந்தேதி) 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.

இதற்காக பதிவு செய்வது புத்தாண்டு தினமான நேற்று தொடங்கி உள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், “புத்தாண்டையொட்டி, 15-18 வயது வரையிலானவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் பதிவு செய்வது இன்று தொடங்கி உள்ளது. தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறி உள்ளார்.

15-18 வயதினருக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தி 30 நிமிடம் கண்காணிப்பில் வைத்த பின்னரே அனுப்பி வைப்பார்கள். 28 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் செலுத்தப்படும்.

இவர்களுக்கென தனியாக தடுப்பூசி மையங்கள் உருவாக்கப்படுகின்றன. மற்ற வயதினருக்கு தடுப்பூசி போடுகிறபோது, குழப்பம் நேரிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.

இணையதள வசதி கொண்டுள்ள கம்ப்யூட்டர்களில் கோவின் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

செல்போனில் பதிவு செய்ய விரும்புவோர் அனைத்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள்போன்களில் உள்ள பிளேஸ்டோரில் கோவின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை, 10-ம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை அடையாள ஆவணங்களாக பயன்படுத்தலாம்.